பேக்கரைட்டு
பேக்கரைட்டு (Bakerite) என்பது Ca4B4(BO4)(SiO4)3(OH)3•(H2O)) என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். நீரேறிய கால்சியம் போரோ-சிலிக்கேட்டு ஐதராக்சைடுக்கு பேக்கரைட்டு என்ற பொதுப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள பேக்கரில், எரிமலைப் பாறைகளில் இக்கனிமம் கிடைக்கிறது [1].
பேக்கரைட்டு Bakerite | |
---|---|
![]() பேக்கரைடு மாதிரி | |
பொதுவானாவை | |
வகை | நியோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | Ca4B4(BO4)(SiO4)3(OH)3·H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றதாக,வெண்மையாக |
படிக அமைப்பு | ஒற்ரைச் சரிவு |
மோவின் அளவுகோல் வலிமை | 4½ |
மிளிர்வு | கண்ணாடித் தன்மை,மந்தம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 2.88 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.624 nβ = 1.635 nγ = 1.654 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.030 |
2V கோணம் | Measured: 87° to 88° |
ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் இன்யோ மாகாணத்திலுள்ள, பேர்னாசு கிறீக் மாவட்ட, சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில், கார்க்சுகிரியு கேன்யன் சுரங்கத்தில் 1903 ஆம் ஆண்டு முதன்முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது.[2] பசிபிக் கடற்கரை போராக்சு நிறுவனத்தின் இயக்குனர் இரிச்சார்டு சி.பேக்கர் கண்டறிந்த காரணத்தால் இக்கனிமத்திற்குப் பேக்கரைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
- "Bakerite mineral data". WebMineral.com. மூல முகவரியிலிருந்து 5 April 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-08.
- Mindat.org
- Handbook of Mineralogy
- Hildebrand, GH. (1982) Borax Pioneer: Francis Marion Smith. San Diego: Howell-North Books. p. 89. (ISBN 0-8310-7148-6)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.