பேர்னாசு கிறீக், கலிபோர்னியா


பேர்னாசு கிறீக் (Furnace Creek) என்பது, ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இன்யோ கவுன்டியில் அமைந்துள்ள ஒரு இடம் ஆகும். மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உரிய அலகொன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்விடத்தின் மக்கள்தொகை 31 மட்டுமே. கடல் மட்டத்துக்குக் கீழ் 190 அடிகள் (58 மீட்டர்) மட்டத்தில் அமைந்துள்ள இவ்விடமே ஐக்கிய அமெரிக்காவில் மிகத் தாழ்ந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலகு ஆகும். பயணிகள் மையம், அருங்காட்சியகம், சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் தலைமையகம் என்பன பேர்னாசு கிறீக்கில் அமைந்துள்ளன. பேர்னாசுக் கிறீக்கைச் சுற்றிலும் தேசிய பூங்காச் சேவையின் பெருமளவு பொது முகாம் திடல்கள் அமைந்துள்ளன.

பேர்னாசு கிறீக், கலிபோர்னியா
CDP
பேர்னாசு கிறீக் பண்ணையின் நுழைவாயில்

இன்யோ கவுன்டியில் பேர்னாசு கிறீக்கின் அமைவிடத்தைக் காட்டும் கலிபோர்னியா மாநில நிலப்படம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
கவுன்டிஇன்யோ
பரப்பளவு
  மொத்தம்80.1
  நிலம்80.1
  நீர்0
ஏற்றம்[1]-58
மக்கள்தொகை (2000)
  மொத்தம்31
  அடர்த்தி0.4
நேர வலயம்பசிபிக் (PST) (ஒசநே-8)
  கோடை (பசேநே)PDT (ஒசநே-7)
ZIP குறியெண்92328
தொலைபேசி குறியீடு760
FIPS குறியெண்06-28021
GNIS சிறப்பு அடையாளம்1853390


சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் தனியாருக்குச் சொந்தமான "பேர்னாசு கிறீக் இன் அன்ட் பேர்னாசு கிறீக் ரிசோர்ட்" (Furnace Creek Inn and Furnace Creek Ranch) என்னும் விடுதியும் இங்கு உள்ளது. இவ்விடுதியோடு சேர்ந்து அமைந்துள்ள "கோல்ப் திடல்" உலகிலேயே மிகத் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள "கோல்ப் திடல்" ஆகும். இது கடல் மட்டத்துக்குக் கீழ் 214 அடிகளில் (65 மீட்டர்) அமைந்துள்ளது. கோடையில் இங்கு வெப்பநிலை 125°ப (52°ச) ஐத் தாண்டும் ஆதலால், இக் காலத்தில் பெரும்பாலான தங்கும் வசதிகள் மூடப்பட்டிருக்கும். பேர்னாசு கிறீக்கில் ஒரு உணவகம், சிற்றுண்டியகம், கடை, எரிபொருள் நிலையம் என்பனவும் உள்ளன. பேர்னாசி கிறீக் வானூர்தி நிலையம், பூங்காத் தலைமையகத்துக்கு மேற்கே முக்கால் மைல்கள் (1.21 கிமீ) தொலைவில் இருக்கிறது.


குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.