மோவின் அளவுகோல்

மோவின் அளவுகோல் (Mohs scale of mineral hardness) தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சோ்ந்த ஃபிரடரிக் மோ ஆவார்.[1]

ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!

கனிமங்களின் கடினத்தன்மை

மோ வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:

மோவின் கடினத்தன்மை கனிமம் கடின எண் படிமம்
1 மாக்கல் (talc) (Mg3Si4O10(OH)2) 1
2 ஜிப்சம் (CaSO4·2H2O) 3
3 கால்சைட்டு (CaCO3) 9
4 புளூரைட் (CaF2) 21
5 அப்படைட்டு (Ca5(PO4)3(OH-,Cl-,F-)) 48
6 ஆர்த்தோகிளேசு ஃபெல்ட்ஸ்பார் (KAlSi3O8) 72
7 படிகக்கல் (quartz)(SiO2) 100
8 புட்பராகம் (topaz)(Al2SiO4(OH-,F-)2) 200
9 குருந்தக்கல் (Al2O3) 400
10 வைரம் (C) 1600

மேற்கோள்கள்

  1. Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 22 Feb. 2009 "Mohs hardness."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.