இடை ஆட்டம்

இடை ஆட்டம் (‎Belly dance) என்பது மேற்கு ஆசியா, குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும்.அரபு மொழியில் ராக்ஸ் ஷர்கி (Raqs Sharqi) (அரபு:رقص شرقي) என்றும் அழைக்கபடுகிறது.அரபு மொழியில் இதற்கு கிழக்கின் நடனம் (Dance Of The East) என்று பொருள்.[1] இடை ஆட்டத்தை பேச்சு வழக்கில் பெல்லி நடனம்‎ என்று அழைக்கின்றனர்.இடை ஆட்டத்தின் போது தொப்புளும் வெளிகாட்டப்பட்டு அதுவும் உருவம் மாறுவதாக தோன்றுவதால் தமிழ்நாட்டில் பேச்சு வழக்கில் இடை ஆட்டத்தை தொப்புள் நடனம் என்றும் அழைக்கின்றனர்.[2][3]

இடை ஆட்டம் ஆடும் பெண்

வரலாறு

ஜீன் லியோன் ஜேர்மி என்ற ஓவியரால் தீட்டப்பட்ட இடை ஆட்டத்தை பிரதிபலிக்கும் ஓவியம்.

இடை ஆட்டத்தின் வரலாறு குறித்து இன்றும் விவாதங்கள் உள்ளன. இதன் காரணமாக இடை ஆட்டத்தின் பூர்வீகம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. எகிப்து நாடே இவ்வாட்டத்தின் பூர்வீகம் என்றும், அரேபிய நாட்டின் கடவுள் வழிபடும்போது ஆடும் நடனம் என்றும், புராண கால பிரசவ நடைமுறையின் ஒரு அங்கம் என்றும்,இந்தியாவில் தோன்றி பின்னர் ரோமா மக்களால் உலகிற்கு பரவியது என்றும் பல கோட்பாடுகள் உள்ளன.[4]

இருந்தாலும் இடை ஆட்டம் சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு நடனமாகும்.புதிய கற்காலத்தில் தோன்றி ஐரோப்பா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என பல நாடுகளின் கலாச்சாரத்தின் பதிப்புகள் இவ்வாட்டத்தில் காணப்படுகிறது.[5] ஆனாலும் இடை ஆட்டம் மத்திய கிழக்கு நாடுகளின் பாரம்பரிய நடனமென பொதுவாக கருதப்படுகிறது.[6]

உடல் நலம்

இடை ஆட்டம் ஒரு சிறந்த உடற் பயிற்சியாக கருதப்படுகிறது.இடை ஆட்டம் பெண்களின் உடல்நலத்திற்கு உதவுகிறது.[7] முறையான பயிற்சி பெற்ற இடை ஆட்டம் மற்றும் உணவு கட்டுப்பாடு முலம் ஒரு மணிநேரத்தில் 300 கலோரிகள் வரை உடல் எடையை குறைக்கலாம்.ஆட்டத்தின் தீவிரத்தை பொருத்து இது மாறலாம்.இடையை வளைத்து நெளித்து ஆடுவதால்,மூட்டுக்குரிய திரவியத்தின் பாய்ச்சல் சீராகிறது,தசை முறுக்கு ஏற உதவுகிறது.இது முதுகு வலி, எலும்புப்புரை போன்றவற்றை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.உணவு ஜீரணத்திற்கும் இது உதவும்.முன்பேறுகால கவன முறையாக இடை ஆட்டப்பயிற்சியை பெண்கள் செய்தால்,இயற்கை பிரசவத்திற்கான வாய்ப்பு அதிகமாகிறது.பிரசவத்திற்கு பின்னும் இடை ஆட்டப்பயிற்சியை கடைபிடித்தால் அடிவயிற்றுக் கொழுப்பை கரைத்து,வயிற்றுத் தசைகள் முறுக்கு ஏற்றி இடை அழகை பராமரிக்க உதவும்.[8][9][10] 1950களில் குழந்தை ஈன்றெடுக்கும் தருவாயில் இருக்கும் கர்ப்பமான பெண்ணை சுற்றி இதர பெண்கள் இடை ஆட்டம் ஆடி,உடல் அசைவுகளில் அவளை வசியம் செய்வர். இதன் மூலம் அப்பெண் குழந்தை ஈன்றெடுக்கும்போது ஏற்படும் வழிதெரியாமல் இருக்க இது செய்யப்படுகின்றது. என்று பாராப் பிர்டோஸ் என்னும் அரேபியா ஆட்டக்களைஞர் கூறியுள்ளார்.[11]

பாப் இசை உலகம்

பாப் இசை உலகில் ஷக்கீரா மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் இருவரும் இடை ஆட்டத்தை பிரபலப்படுத்தியுள்ளனர். [12] [13] [14] [15]

ப்யூட்டிஃபுல் லயர் பாடலின் நிகழ்படத்தில் பியான்சே நோல்ஸ்(பின்னால்) உடன் இடை ஆட்டம் ஆடும் ஷக்கீரா.
ஐ எம் எ ஸ்லேவ் 4 யு பாடலுக்கு மேடையில் இடை ஆட்டம் ஆடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

ஷக்கீரா

பாப் இசைக் கலைஞரான ஷக்கீராவின் துடிப்பு மிக்க நடனம் அவரது இசைப்படங்களை பிரபலமாக்கியது.அவரது நடன அசைவுகள் அரபி பெல்லி நடன வகையைச் சார்ந்து இருந்தது. இளம் வயதிலேயே இந்நடனத்தைக் கற்றுக் கொண்டதாக ஷக்கீரா கூறுகிறார்.[16] ஒரு எம்.டிவி பேட்டியில் ஷக்கீரா தான் சிறு வயதாக இருக்கும்பொழுது, அவரது வயிறுப்பகுதியில் நாணயத்தை எப்படி சுழலவைப்பது என்று முயன்று பெல்லி நடனம் கற்றதாகக் கூறினார்.[17] இவரது இடை ஆட்ட நடனங்களை அவரது நிகழ்படங்களில் காணலாம்.குறிப்பாக, ஓஜோஸ் அஸி, லா டோர்டுரா, ஹிப்ஸ் டோன் லை, 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வமான பாடலான வாக்கா வாக்கா(திஸ் டைம் போர் ஆப்ரிக்கா ) போன்ற பாடல்களின் நிகழ்படங்களில் இவரது பெல்லி நடனம் அடக்கம். [18] [19] ப்யூட்டிஃபுல் லயர் என்ற பாடலின் நிகழ்படத்தில் ஷக்கீரா பியான்சே நோல்ஸ் உடன் இணைந்து இடை ஆட்டம் ஆடியுள்ளார்.[20][21][22] மேலும் பெல்லி நடன இயக்குனர்கள் பலரையும் கைவசம் வைத்திருக்கிறார். அவர்களில் விருதுபெற்ற பெல்லி நடன இயக்குனர் பொயன்காவும் (Boženka) அடங்குவார்.[23]

பிரிட்னி ஸ்பியர்ஸ்

அமெரிக்கப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தொப்புளையும் இடையையும் வெளிகாட்டும் உடையில் இசைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றுவது வழக்கம். தனது இசை தொகுப்பான பிரிட்னி (2001) இல் ஐ எம் எ ச்லவே 4 உ என்ற பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.[24] இதற்காக புவேர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த மய்டே கார்சியா(Mayte Garcia) என்ற நடன கலைஞரிடம் இடை ஆட்ட பயிற்சியும் பெற்றார்.[25][26]

சினிமா

இந்திய சினிமாவில் இடை ஆட்டம் குத்தாட்டப் பாடல்களில் கவர்ச்சி ஆட்டமாக இடம்பெறுகிறது.

ஷீலா கி ஜவானி பாடலுக்கு இடை ஆட்டம் ஆடும் நடிகை கேட்ரீனா கய்ஃப்.

இந்தி சினிமா

2007ல் குரு இந்தி படத்தில் மைய்யா மைய்யா பாடலுக்கும்,ஆப் கா சுரூர் ஹிந்தி படத்தில் ஷோலே(1975)வின் மெகுபூபா மெகுபூபா பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் மல்லிகா செராவத்தின் இடை ஆட்டம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.[27][28][29][30] 2010ல் வெளிவந்த டீஸ் மார் கான் இந்தி படத்தில் ஷீலா கி ஜவானி குத்தாட்டப் பாடலுக்கு நடிகை கேட்ரீனா கய்ஃப் ஆடிய இடை ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது.[31] இவரது இடை ஆட்டம் ஷக்கீராவின் இடை ஆட்டத்துடன் ஒப்பீட்டு பேசப்பட்டது.[32][33]

தமிழ் சினிமா

1995ல் வெளிவந்த முத்து தமிழ் திரைப்படத்தில் தில்லானா தில்லானா பாடலுக்கு நடிகை மீனாவின் இடை ஆட்டமும் அண்மை நிலை தொப்புள் காட்சியும் மிகப் பிரபலமானது. 1997ல் வெளிவந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் மனம் விரும்புதே பாடலுக்கு நடிகை சிம்ரனின் இடை ஆட்டம் அவரை பிரபலமாக்கியது.அதன் பிறகு பல பாடல்களில் இடை ஆட்டம் இடம் பெற்றாலும் ரகசியா ,முமைத் கான் போன்ற குத்தாட்ட நடிகைகளால் தமிழ் சினிமாவில் இடை ஆட்டம் புத்துயிர் பெற்றது.அதற்கு காரணம் இவர்கள் பயிற்சி பெற்ற இடை ஆட்டக்கலைஞர்கள் ஆவர்.[34][35] ரகசியா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) படத்தில் சிரிச்சி சிரிச்சி வந்தா பாடலுக்கு இடை ஆட்டம் ஆடினார்.அதன் பிறகு பரமசிவன் (2006), யாரடி நீ மோகினி (2008) மற்றும் பல படங்களின் குத்தாட்டப்பாடல்களில் இவரின் இடை ஆட்டம் மிகப்பிரபலம்.[36]

அல்லேக்ரா பாடலுக்கு இடை ஆட்டம் ஆடும் சிரேயா சரன்.

இதேபோல் முமைத் கான், வில்லு (2009) படத்தில் டாடி மம்மி, கந்தசாமி (2009) படத்தில் என் பேரு மீனாகுமாரி மற்றும் பல படங்களில் குத்தாட்டப் பாடல்களுக்கு இடை ஆட்டம் ஆடியுள்ளார்.[37] தென்னிந்திய குத்தாட்ட நடிகைகளில் navel piercing எனப்படும் தொப்புள் நகை அணிந்த முதல் நடிகை என்ற பெருமை முமைத் கானுக்கு உண்டு.[38][39][40][41] அதே கந்தசாமி (2009) படத்தில் அல்லேக்ரா பாடலுக்கு சிரேயா சரன் இத்தாலிய பெண் நடனக்கலைஞர்களுடன் இடை ஆட்டம் ஆடினார். இது பெரும் வரவேற்பு பெற்றது.[42] இதை தொடர்ந்து அவர் நடனமாடும் அனைத்து பாடலகளிலும் இவரது இடை ஆட்டம் இடம் பெரும்.[43] நடன அமைப்பாளர் பிருந்தா "தென்னிந்திய திரை உலகிலேயே சிறந்த இடை சிரேயா உடையது தான்" என்று கூறியுள்ளார்.[44] வேலாயுதம் (2011) திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானி சில்லாக்ஸ் என்ற பாடலுக்கு இடை ஆட்டம் ஆடியுள்ளார்.

அண்மையில்,நண்பன்(2012) திரைப்படத்தில் இடை ஆட்டத்தை பிரதானமாக கொண்ட இருக்கானா இடுப்பிருக்கானா என்னும் பாடலுக்கு இலியானா பல பெண் இடை ஆட்டக்கலைஞர்களுடன் இடை ஆட்டம் ஆடினார்.இது பெரும் வரவேற்பு பெற்றது.[45] இப்பாடலுக்கு இந்தி படவுலகின் முன்னணி நடன அமைப்பாளர் ஃபரா கான் நடனம் அமைத்தார்.[46][47]

ஆபாசம்

லூயிஸ்-பிரான்க்ஒயிஸ் காஸ்சாஸ் (Louis-François Cassas) என்ற ஓவியரால் 1785ல் தீட்டப்பட்ட அரை நிர்வாண இடை ஆட்டத்தை பிரதிபலிக்கும் ஓவியம்.

”உலகளவில் சிலரிடம் இடை ஆட்டம் ஒரு கீழ்த்தரமான ஆபாச நடனம் என்ற கருத்து உள்ளது” என்று ஹாலிவுட்டில் புகழ் பெற்ற இடை ஆட்டக்கலைஞர் மற்றும் ஆசிரியரான பிரின்சஸ் பார்ஹானா கூறியுள்ளார்.[48] இதற்கு ஒரு காரணம் பழங்கால ஓவியர்கள் கற்பனையாக தீட்டிய ஓவியங்களில் இடை ஆட்டம் ஆடும் பெண்கள் நிர்வாணமாகவோ அல்லது அரை நிர்வாணமாகவோ காணப்படுகின்றனர்.[49] இதன்முலம் சிலரால் உரூவாக்கபட்ட வெற்றுப் புனைவு கதைகளால் இடை ஆட்டம் பெண்களால் சிற்றின்பம் அடையவே ஆடப்படுகிறது என்ற தவறான கருத்து உரூவாகியுள்ளது.[50][51] ஹாலிவுட் சினிமாவில் இடை ஆட்டத்தை கவர்ச்சியாக காமநோக்கில் காட்டிவருவது மற்றொரு காரணமாகும்.[52] இடை ஆட்டத்தின் பிறப்பிடமாக கருதப்படும் எகிப்து நாட்டின் அரசாங்கமே இடை ஆட்டம் ஆபாசமானதாக கூறி இடை ஆட்டகலைஞர்களுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது.[7][53]

இந்தியாவில் இந்நடனம் சினிமாவில் ஏற்கப்பட்டாலும் பொதுவாக இது ஒரு ஆபாச நடனமாகவும் கலாச்சார சீரழிவாகவும் கருதப்படுகிறது. உதாரணமாக 2003ல் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தோர் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடை ஆட்டம் போன்ற மேற்கத்திய நடன நிகழ்ச்சிகளை ஐந்து நட்சத்திர உணவகங்களில் நடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். [54] [55] 2008ல் மும்பையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஜென்மாஷ்டமி விழாவில், தொப்புளை காட்டி நடனம் ஆடும் இடை ஆட்டப் பெண்கள் நடனம் ஆடினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விழாவில் ஆபாச நடனம் ஏற்பாடு செய்ததற்கு பாஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் பொதுச்செயலர் வினோத் தவாடே கூறுகையில், "பவார் பாதையை அப்படியே அவர் கட்சியினர் பின்பற்றுகின்றனர் என்பது இதில் இருந்து தெரிகிறது. அவர் தான் சியர் லீடர்ஸ் அழகிகளை, மைதானத்தில் நடனம் ஆட அனுமதித்தார்; அவரின் சீடர்கள், கிருஷ்ண ஜெயந்தி விழாவில், பெல்லி டான்சர்களை ஆட வைத்துள்ளனர்" என்று கூறினார்.[56]

மேற்கோள்கள்

  1. History of Belly Dance and dancing
  2. நையாண்டி : தமிழ்பௌல் - பாஸ்டன் பாலாஜி
  3. கெட்ட வார்த்தை கிளி மற்றும் இன்ன பிற உல்லாச சங்கதிகள்
  4. Oriental dancing
  5. What is Belly Dance and What Should We Really Call It
  6. Belly Dancing History
  7. Tummy talk
  8. Health Benefits of Belly Dance
  9. From flab to fab: belly dance your way to fitness
  10. From flab to fab: belly dance your way to fitness - Ebony,Aug 2007
  11. "Belly Dancing" and Childbirth
  12. Britney Spears And Shakira Spark Bellydance Popularity
  13. Shakira And Britney Spears Popularizing Belly Dancing
  14. Suzy Evans - A Dancer With a Vision - by Jane Henriksen
  15. Body & Mind: Belly-Dance Boom
  16. Shakira's Belly Dancing Discovery
  17. Shakira spills toned tum secret - The Sun
  18. Shakira Considering Album in Arabic - abc News
  19. Cavalli Designs Floral Hula Skirt For Shakira
  20. Beyoncé and Shakira Shake It Well Together
  21. Shakira Showed Beyonce How To Belly Dance
  22. Belly Dance: Shake It Like Shakira
  23. "Bozenka". Bozenka.biz (November 6, 2007). பார்த்த நாள் October 31, 2009.
  24. I’m A Slave 4 U
  25. Mayte Big Changes
  26. Interview Mayte Garcia
  27. Mallika"s Raavan dance - India Today
  28. Mallika Sherawat is the Queen of Belly Dancing! - Rajiv Dutta - IndiaTarget.com
  29. The secret behind Mallika's hot looks! - Times Of India
  30. Sexy Belly Dance Getting Hot Response - GreatAndhra.com
  31. Rise of the Navel - 'Bollywood navel fashion has led to re-emergence of sari' - India Today
  32. Katrina compared with Shakira
  33. Comparison with Shakira a huge compliment: Katrina Kaif- India Today
  34. Mumaith Khan's 'Shaking Belly' - GreatAndhra.com
  35. Grill mill -- Rahasya - The Hindu
  36. Ragasiya serious about item song dances - Dailomo.com
  37. Where are all the item girls? - Times Of India
  38. Navel or Nipple ?
  39. Mumaith Khan - Profile
  40. Mumaith Khan -Biography
  41. Mumaith Khan - Portfolio
  42. Telugu Movie review - Mallanna (Kanthaswamy in Tamil)
  43. Shreya turns belly dancer
  44. Shriya - Best HIP in the industry
  45. Ileana steals the show in 3 Idiots Tamil remake Read more at: http://indiatoday.intoday.in/story/nanban-3-idiots-tamil-remake-ileana-d-cruz/1/169008.html
  46. Sultry, Sexy Belly Dance Sequence of Ileana in Nanban!
  47. Ileana and Vijay in Belly Song from Nanban
  48. Interview with Belly dancer Princess Farhana
  49. Naked Belly Dance in Ancient Egypt
  50. History of Oriental Dance (Belly Dance)
  51. Fact or Fiction: Which Dance History Claims Should You Believe?
  52. The Secret Joys of Belly Dance
  53. Meditations on the navel ban by Maria Golia
  54. Hindu Extremists Riot at Belly Dance Show
  55. Bajrang Dal issues threat against New Year celebrations
  56. ஜென்மாஷ்டமி விழாவில் 'பெல்லி டான்சர்'கள் 'கலக்ஸ்': 'சியர் லீடர்ஸ்' கிளுகிளுப்புக்கு பின் புது சர்ச்சை - தினமலர்.காம்

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.