ரோமா மக்கள்

உரோமானி மக்கள் (Romani people) அல்லது ரோமா மக்கள் என்பவர்கள் தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்[24]. இவர்கள் பொதுவாக ஜிப்சிகள் என அழைக்கப்படுகின்றனர். ரோமானி மக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஓர் இனக்குழுவாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர்[25].

ரோமா
Roma
ரோமா மக்களின் கொடி
2007 இல் பிராக் நகரில் கமோரோ ரோமா விழா
மொத்த மக்கள்தொகை
15 மில்லியனுக்கும் அதிகம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா5,794,000[1]
 துருக்கிசர்ச்சைக்குரியது:
700,000 (அதிகாரபூர்வமாக)
3,000,000-5,000,000 (மதிப்பீடு)[2]
 உருமேனியாசர்ச்சைக்குரியது:
535,250
(அதிகாரபூர்வமானது)
மதிப்பீடு:
700,000–2,500,000[3]
 எசுப்பானியா600,000-800,000
அல்லது 1,500,000[4]
 பிரான்சு500,000 (அதிகாரபூர்வமானது)
1,200,000-1,300,000 (மதிப்பீடு)[5]
 ஐக்கிய அமெரிக்கா1,000,000[6]
 அங்கேரிசர்ச்சைக்குரியது: 205,720 (அதிகாரபூர்வமானது);
மதிப்பீடு:
450,000-1,000,000[7]
 பிரேசில்678,000–900,000[8]
 பல்கேரியாசர்ச்சைக்குரியது: 370,908 (அதிகாரபூர்வமானது) - 700,000–800,000[9]
 சிலவாக்கியாசர்ச்சைக்குரியது: 92,500 - 550,000[10]
 செர்பியாசர்ச்சைக்குரியது: 108,193
500,000 மதிப்பீடு[11]
 உருசியாசர்ச்சைக்குரியது: 183,000
to 400,000[12]
 கிரேக்க நாடுசர்ச்சைக்குரியது: 200,000
அல்லது 300,000–350,000[13]
 உக்ரைன்48,000 - 400,000[14]
 அர்கெந்தீனா300,000[15]
 செக் குடியரசுசர்ச்சைக்குரியது: 11,746
அல்லது 220,000-300,000[16]
 மாக்கடோனியக் குடியரசுசர்ச்சைக்குரியது: 53,879
- 260,000[17]
 செருமனி110,000–130,000
 அல்பேனியாசர்ச்சைக்குரியது: 1,300-120,000[18]
 ஈரான்110,000[19]
 இத்தாலி90,000–110,000
 கனடா80,000[20]
 கொலம்பியா79,000[21]
 போர்த்துகல்40,000[22]
 போலந்து15,000-50,000[23]
மொழி(கள்)
ரொமானி, நாட்டு மொழிகள்
சமயங்கள்
ரொமானிப்பென்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தெற்காசியர்கள் (தேசி)

வரலாறு

மரபியல், மற்றும் மொழியியல் ஆய்வுகளின் படி, ரோமா மக்கள் இந்திய உபகண்டத்தில் இருந்து 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வடமேற்கே இடம்பெயர ஆரம்பித்தவர்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் குறிப்பாக இந்தியத் தலித் மக்களின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[26] ஐரோப்பாவில் உள்ள ரோமா மக்களின் மூதாதைகள் இன்றைய பஞ்சாப் பிரதேசத்தில் இருந்து கிபி 1001 இற்கும் 1026 இடைப்பட்ட காலத்தில் தமது சாதியினரின் நிலைகளை உயர்த்தும் பொருட்டு இடம்பெற்ற போர்களினால் மேற்கு நோக்கி முதன் முதலில் நகர்ந்தனர் என் வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இன்றைய பாக்கித்தான் போன்ற பிரதேசங்களில் இந்து இராச்சியங்களின் வீழ்ச்சியை அடுத்து இடம்பெயர நேர்ந்தது. இந்திய உபகண்டத்தில் இசுலாம் பரவிய காலத்தில் அகதிகளாக வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவுக்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர்.[27]

குறிப்புகள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.