பெர்ட்ரண்டு ரசல்
பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970): ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல்சில் இறந்தார்.[1]
மேற்கத்திய மெய்யியல் 20ஆம் நூற்றாண்டு மெய்யியல் | |
---|---|
![]() 1907 இல் ரசல் | |
முழுப் பெயர் | பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல் |
பிறப்பு | மே 18, 1872
ட்ரெல்லெக், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 2 பெப்ரவரி 1970 97) வேல்ஸ், ஐக்கிய இராச்சியம் | (அகவை
சிந்தனை மரபு(கள்) | Analytic philosophy இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1950) |
முக்கிய ஆர்வங்கள் | Ethics, epistemology, தருக்கம், கணிதம், மொழியியல், அறிவியலுக்கான மெய்யியல், சமயம் |
ரசல் 1900களின் தொடக்கத்தில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராகக் கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வுத் தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் கோட்லோப் பிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை தருக்கத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" எனக் கருதப்படுகிறது[2]. இந்த இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம் முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.
ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வணிகத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.[3][4]. இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தார். அணுகுண்டு கைவிடுதலையை ஆதரித்தார், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தார்[5].
ரசலுக்கு, அவரின் பலவகைப்பட்ட எழுத்துகளினால், "மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும்" 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது"[6].