பூச்சிக்கொல்லி

பூச்சி கொல்லி என்பது, மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும்..[1] பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் குடம்பிகளையோ அழிக்கவல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன.[2] அனைத்துப் பூச்சிக்கொல்லிகலுமே சுற்றுச்சூழலை மாற்றவல்லன; இவற்றில் பல, விலங்குகளுக்கும் மாந்தருக்கும் நஞ்சாக அமைகின்றனs; இவற்றில் சில உணவு வலையிலும் செறிகின்றன.

தான்சானிய உழவர் முந்திரிக் கொட்டை மரத்துக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல்
வீட்டுப் பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லிகளை அமைப்புறும் பூச்சிக்கொல்லிகள், தொடுகைப் பூச்சிக்கொல்லிகள் என இருவகைப்படும். முன்னவை எச்சநிலை அல்லது நெடுங்கால விளைவுடையவை. பின்னதற்கு எச்சநிலை வினைத்திறம் அமைவதில்லை.

தீங்குயிர்கொல்லியின் செயல்பாட்டு முறைமை அது எப்படி தீங்குயிரைக் கொல்கிறது அல்லது செயலிழக்கச் செய்கிறது என்பதை விவரிக்கிற்து. எனவே அவற்ரை செயல்பாட்டும் முறைமையை வைத்தும் வகைப்படுத்தலாம். மீன்,பறவை, பால்லூட்டி போன்ற தொடர்பற்ர உயிரினவகைகளுக்கு நஞ்சாகவல்ல விளைவை செயல்பாட்டு முறைமையேதெள்வாக விளக்குகிறது.

பூச்சிக்கொல்லிகள் விரட்டியடிப்பனவாகவோ விரட்டியடிக்காதனவாகவோ அமையலாம். எறும்பு போன்ற கூட்டுவாழ்க்கை உயிரினங்கள் விரட்டியடிக்காதவற்றைக் கண்டறிய முடியாது. எனவே அவற்ரின் ஊடாக ஊர்ந்துசெல்கின்றன.னாவை கூட்டுக்குத் திரும்பும்போது தம்மோடு பூச்சிக்கொல்லியையும் உடன் கொண்டுசெல்கின்றன. கூட்டில் உள்ள எறும்புகட்கும் பூச்சிக்கொல்லியைப் பரிமாறுகின்றன. இது நாளடைவில் அரசித்தேனீ உட்பட அனைத்து எறும்புகளையும் அழிக்கின்றது. பிற முறைகளை விட இது மெதுவாக நடந்தாலும் முழுவதுமாக எறும்புத்திரளை நீக்கிவிடுகிறது.[3]

பூச்சிக்கொல்லிகள் பூச்சிவிரட்டிகளிலிருந்து வேறுபட்டன. பூச்சிவிரட்டிகள் பூச்சிகளைக் கொல்வதில்லை.

செயல்பாட்டு வகைகள்

அமைப்புறும் வகைப் பூச்சிக்கொல்லிகள் முழுத்தாவரத்தினுள்ளும் ஊடுருவிப் பரவுகின்றன. பூச்சிகள் அந்தத் தாவரத்தை உண்ணும்போது, பூச்சிக்கொல்லியையும் உட்கொள்ள நேர்கிறது. மரபன் திருத்தத் தாவரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட அமைப்புறும் பூச்சிக்கொல்லிகள் தாவர உள்ளடக்கிய காப்பான்கள் எனப்படுகின்றன. எடுத்துகாட்டாக, பேசில்லசு துறிஞ்சியென்சிசு எனும் குறிப்பிட்ட உயிர்க்கொல்லிப் புரதத்தை உருவாக்க குறிமுறையுள்ள மரபன் சோளக் கூலத்திலும் பிறவற்றிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இவ்வகைப் பயிர் அப்புரதத்தை உருவாக்குவதால் அதை உண்ணும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.[4]

தொடுகை வகைப் பூச்சிக்கொல்லிகள் புச்சிகளை நேரடியாகத் தீண்டும்போது அவை நண்ஜ்சூட்டுகின்றன. இவை கனிமவகைப் பூச்சிக்கொல்லிகளாக அமையலாம் கணிமப் பூச்சிக்கொல்லிகள் பொன்மங்களோடு வழக்கமாகப் பயனில் உள்ள கந்தகம், குறைவாக வழக்கில் உள்ள ஆர்சனேற்றுகள், செம்பு, புளூரின் சேர்மங்களைப் பயன்கொள்கின்றன. இவை கரிம வகைப் பூச்சிக்கொல்லிகளாகவும் அமையலாம் அதாவது தொகுப்புமுறையில் ஆக்கப்பட்ட கரிம வேதிச் சேர்மங்களைப் பயன்படுத்தலாம்.னைன்று பேரளவில் வழக்கில் உள்ள பூச்சிக்கொல்லிகள் கரிமவேதிப் பொருட்களையே பயன்படுத்துகின்றன. அல்லது பைரித்திரம், வேம்பெண்ணெய் போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றன. தொடுகை வகைப் பூச்சிக்கொலீகளின் வழக்கமாக அடித்த பிறகு எஞ்சி நிறபதில்லை.

செயல்திறத்தை மேம்படுத்தும் காற்றுக் கரைசல் போல சிறுதுளிகளாகப் பயன்படுத்தும்போது தீங்குயிர்கொல்லிகளை தரமும் வினைத்திறமும் கூடுகிறது.[5]

பூச்சிகொல்லிகளின் கரிம வேதியியல் வகைகள்

கரிமப் பூச்சிக் கொல்லிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  • குளோரீன் சேர்ந்த சேர்மங்கள். இவை டிடிரி (டை குளோரோ டைஃபீனைல் ட்ரை குளோரோ ஈத்தேன், DDT), பிஎச்சி (பென்சீன் ஹெக்சா குளோரட், BHC) போன்றவை.
  • பாஸ்பரஸ் சேர்ந்த சேர்மங்கள்; எ-கா: பாரதையான் (Parathion).

பிஎச்சி என்பதே முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லியாகும். ஆனால் இம்மருந்துகளையும் எதிர்த்து பூச்சிகள் வாழ் முற்பட்டன. அத்துடன் இம்மருந்துகள் நிலத்தில் தங்கி நீர்நிலைகளில் சேரத்தொடங்கின.

பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டிடிரி பெரும்பாலும் மலேரியாவைக் கட்டுப்படுத்தவும் பயிர்த்தொழிலில் கேடு விளைவிக்கும் உயிரினங்களைக் கொல்லவும் பயன்படுத்தப்பட்டது.

பூச்சிக்கொல்லிகளினால் விளையும் கேடுகள்

பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் பொருள்களாகும். இவை சுற்றுச் சூழல் மாசுபடுத்தும் பிரச்சினையையும் கிளப்பியிருக்கிறது. சில வேதிப் பொருள்கள் காய்கறிகளிலுள்ள திசுக்களில் சேர்ந்து மனிதரையும் பாதிக்கக்கூடிய அளவு நச்சுத்தன்மையை அடைகின்றன. இவ்வாறான நச்சுப்பொருள்கள், உணவுச் சங்கிலியில் செறிவடைந்து வருகின்றன. மேலும் சில பூச்சி மருந்துகள் இரண்டாம் நிலப் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடுகின்றன.

  1. IUPAC (2006). "Glossary of Terms Relating to Pesticides". IUPAC.
  2. van Emden, H.F.; Peakall, David B. (30 June 1996). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] பூச்சிக்கொல்லி Beyond Silent Spring]. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-72800-6. கூகுள் புத்தகங்களில் பூச்சிக்கொல்லி.
  3. "Non-Repellent insecticides". பார்த்த நாள் 20 April 2017.
  4. "United States Environmental Protection Agency - US EPA".
  5. "dropdata.org". dropdata.org. பார்த்த நாள் 2011-01-05.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.