புஷ்கராயன்

புஷ்கராயன் கங்க வம்சத்தின் 9வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் இல்லை. இவர் துர்வினிதனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]

தலவன்புரம்

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், மந்திர சாத்திரங்களைக் கற்று தேர்ச்சி பெற்று அதன் சக்தியால் பல தேச மன்னர்களை வென்றும், சேர, சோழ, பாண்டிய, ஆந்திர, கலிங்க தேசங்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், அறியமுடிகிறது.[2]

பிரஹத்தியராயன்

புஷ்கராயன் மிகச் சிறந்த கல்வியாளராக விளங்கினான். இவனது ஆட்சியில் பிராமணர்களுக்கு தான தர்மங்கள் செய்ய மறுத்ததால் பிரஹத்தியராயன் என மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.[3]

சான்றாவணம்

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-93-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-93-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள்

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.