புவிநிலைச் சுற்றுப்பாதை

புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் புவிக்கு 0° சாய்வில் 35,786 km (22,223 மைல்கள் ) குத்துயரத்தில் அமையப் பெற்றிருக்கும் சிறப்பு புவியிணக்கச் சுற்றுப்பாதை, புவிநிலைச் சுற்றுப்பாதை (Geosynchronous equatorial orbit, Geostationary orbit, Geostationary Earth orbit) எனப்படும். இதை புவி நிலை வட்டப்பாதை என்றும் புவி ஒத்திணைவு வட்டப்பாதை என்றும் அழைக்கலாம். இச்சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் செயற்கைக்கோள் புவிவானத்தில் ஒரே இடத்தில் இருக்கும்; மேலும் அதன் புவி வரை (ground-track)ஒரு புள்ளி ஆகும். இத்தகைய அமைப்பு தொலைத்தொடர்புத் துணைக்கோள்களுக்கும் வானிலைத் துணைக்கோள்களுக்கும் சிறப்பானது; ஏனெனில், இதன் மூலம் ஒரேயொரு செயற்கைக்கோளின் உதவியுடன் புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எந்நேரமும் இடம்பட[1](coverage) முடியும்.

புவி ஒத்திணைவு வட்டப்பாதையை மேலிருந்து பார்க்கும் வரைபடம். சுழலும் பூமியிலுள்ள அவதானிப்பவரும் செலுத்தப்பட்ட செயற்கைக் கோளும் அவரவர்களைப் பொறுத்தவரை நிலையான இடத்தில் இருப்பதாகத் தோன்றுவதை இவ்வரைபடம் காட்டுகிறது.
பக்கவாட்டுப் பார்வைக்கான வரைபடம்

இந்த வட்டப்பாதையிலுள்ளவை பூமி தன்னைத் தானே சுழலுகின்ற போதும் எப்போதும் பூமியின் ஒரே பகுதியை நோக்கியே சுற்றி வருபவை ஆகும். உதாரணமாய் பூமியிலிருந்து இந்தியாவை நோக்கியே இருக்குமாறு ஒரு செயற்கைக்கோளை இந்த வட்டப்பாதையில் செலுத்தினால் அச்செயற்கைக் கோளானது எந்த நேரமும் இந்தியாவை நோக்கியே இருக்குமாறு பூமியைச் சுற்றிவரும். இந்தச் செயற்கைக் கோளைப் பூமியிலிருந்து பார்த்தால் அவை அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதைப் போலத் தோன்றும். இந்த வட்டப்பாதையானது பூமியின் கடல் மட்டத்திலிருந்து நிலநடுக் கோட்டிற்குக்கு மேலே 35,786 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதி ஆகும்.[2]

வரலாறு

முதன்முதல் புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட துணைக்கோள் சின்க்காம் 3. இது 1964-இல் ஏவப்பட்டது; பசிபிக் பெருங்கடலின் மேல் சுற்றுப்பாதையில் இருந்த இத்துணைக்கோள் எடுத்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் கண்டுகளிக்கப் பட்டது.

விண்கலம் ஒன்றை புவிநிலைச் சுற்றுப்பாதையில் இருத்தலாம் என்ற கருத்தை முதலில் கூறியவர்களாக எர்மன் போட்டோச்னிக்கும் ( எர்மன் நூர்டங் ), கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகியும் கருதப்படுகின்றனர். 1945-இல் ஆர்தர் சி. கிளார்க் என்பவர் இவ்வகைச் செயற்கைக்கோள்களின் தொகுதி எவ்வாறு உலகத் தொலைத்தொடர்புக்கு வழிவகுக்கும் என்பதை விரிவாகக் குறிப்பிட்டார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.