புவி வரை
புவி வரை (ground track) அல்லது நிலத்துச் சுவடு (ground trace) என்பது வானூர்தி அல்லது செய்மதியின் நேரடிக் கீழுள்ள புவிப்பரப்பு ஆகும். செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரை புவிப்பரப்பின் (அல்லது அச்செயற்கைக்கோள் வலம் வரும் வான்பொருளின் பரப்பின்) மீதான செயற்கைக்கோள் சுற்றுப்பாதையின் வீழலை நிலத்துச் சுவடு என்கின்றனர்.
சுமார் இரண்டு சுற்றுக்காலங்களுக்கான அனைத்துலக விண்வெளி நிலையத்தின் நிலத்துச் சுவடு. புவியில் இரவும் பகலும் முறையே கருமையாகவும் வெளிர்மையாகவும் காட்டப்பட்டுள்ளது.
செயற்கைக்கோளின் நிலத்துச் சுவடு நிலப்பரப்பின் மீது அந்தச் செயற்கைக்கோளுக்கும் புவி மையத்திற்கும் இடையே கற்பனையாக வரையப்படும் கோட்டின் நகர்வினைக் குறிக்கும் எனலாம். அதாவது புவியிலிருந்து பார்ப்பவரின் கோணத்திலிருந்து எங்கெல்லாம் நேரடியாக தலைக்கு மேல் செயற்கைக்கோள் செல்கின்றதோ அந்தப் புள்ளிகளின் தொகுப்பாகக் கொள்ளலாம்.[1]
மேற்சான்றுகள்
- Curtis, Howard D. (2005), Orbital Mechanics for Engineering Students (1st ), Amsterdam: Elsevier Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7506-6169-0.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.