கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி

கான்சுடன்சுடீன் எடுவர்டொவிச் சியால்க்கோவுசுகி (Konstantin Eduardovich Tsiolkovsky, உருசியம்: Константи́н Эдуа́рдович Циолко́вский; போலிய: Konstanty Ciołkowski; 17 செப்டம்பர் [யூ.நா. 5 செப்டம்பர்] 1857   19 செப்டம்பர் 1935) உருசிய/ சோவியத்து ஏவூர்தி அறிவியலாளரும் விண்வெளியியல் கோட்பாடுகளுக்கான முன்னோடியுமாவார். இவரும் இவரைப் பின்தொடர்ந்த செருமானிய எர்மன் ஓபெர்த்து, அமெரிக்க இராபர்ட் காடர்ட் ஆகியோரும் ஏவூர்தி மற்றும் விண்வெளியியல் துறைகளை நிறுவியவர்களாக் கருதப்படுகின்றனர்.[1] இவரது ஆக்கங்கள் பிந்நாட்களில் உருசியாவின் முன்னணி ஏவூர்தி பொறியியலாளர்களாக புகழ்பெற்ற செர்கி கோரொலேவ், வாலென்டன் குளுசுக்கோ போன்றோருக்கு அகத்தூண்டலாக அமைந்தது; சோவியத் விண்வெளித் திட்டங்களின் வெற்றிக்கு வழிகோலியது.

கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி
கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி
பிறப்பு17 செப்டம்பர் [யூ.நா. 5 செப்டம்பர்] 1857
இசெவசுகோயெ, உருசியப் பேரரசு
இறப்பு19 செப்டம்பர் 1935(1935-09-19) (அகவை 78)
கலுகா, உருசியா, சோவியத் ஒன்றியம்
துறைவிண்வெளியியல் கோட்பாடுகள்
அறியப்படுவதுசியால்க்கோவுசுகி ஏவூர்திச் சமன்பாடு

சியால்க்கோவுசுகி தமது பெரும்பான்மையான வாழ்நாளை மாசுக்கோவின் தென்மேற்கில் 200 km (120 mi) தொலைவிலிருந்த குளுகா நகரின் புறத்தே மரவீடொன்றில் வசித்து வந்தார்.

மேற்சான்றுகள்

  1. Konstantin E. Tsiolkovsky – Soviet Space Scientist. From San Diego Aerospace Museum Educational Materials
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.