புளியங்குடி க. பழனிச்சாமி

புளியங்குடி க.பழனிச்சாமி (Puliangudi Palanisamy, 1938 - 2007) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் பேச்சாளர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது 13 வது வயதில் பெரியார் மற்றும் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நகைச்சுவைப் பேச்சாளரான இவர் திமுகவின் தொடக்கத்திலிருந்து அதன் பேச்சாளராகப் பணியாற்றினார். திமுக-வின் ஆரம்ப கால பேச்சாளர்களுள் ஒருவராக இருந்தார். மு. கருணாநிதியால் திமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டார். பின்பு தி.மு.கவில் புளியங்குடி நகரச் செயலாளராகவும், 1987 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி என இரு மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட போது திருநெல்வேலி மாவட்ட இணைச் செயலாளரகவும், அதன் பின் மாவட்ட அவைத்தலைவராகவும், மாநிலக் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். அதன் பிறகு, மதிமுகவின் அரசியல் ஆலோசகராகவும் நெல்லை மாவட்ட அவைத்தலைவராகவும் கட்சியில் பணியாற்றி 2007 ஆம் ஆண்டு இறந்தார்.

புளியங்குடி க.பழனிச்சாமி
தலைமை அரசியல் ஆலோசகர்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 7, 1938 (1938-10-07)
புளியங்குடி
இறப்பு பெப்ரவரி 4, 2007(2007-02-04) (அகவை 68)
அரசியல் கட்சி மதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) இராமலட்சுமி
பிள்ளைகள் 2 மகன், 3 மகள்
இருப்பிடம் புளியங்குடி

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.