புதிய கூட்டமைப்பு வாரியம்

புதிய கூட்டமைப்பு வாரியம் (N.F.-Board, Nouvelle Fédération-Board, NFB), அதிகாரபூர்வமற்ற "ஃபீஃபா-அல்லாத-வாரியம்" (Non-FIFA-Board), என்பது 2003 டிசம்பர் 12 இல் உருவாக்கப்பட்ட ஒரு காற்பந்துக் கழகம் ஆகும். இக்கழகத்தில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை அற்ற நாடுகள், சுயாட்சி நிலங்கள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினங்கள், நாடற்ற மக்கள், பிரதேசங்கள், மற்றும் குறுநிலங்கள் போன்றவை உறுப்பினர்களாக உள்ளன. இக்கழகத்தின் தற்போதைய பொதுச் செயலரும் வழக்கறிஞருமான லூக் மிசன் என்பவர் இக்ககத்தைத் தோற்றுவித்தார்.[2]

புதிய கூட்டமைப்பு வாரியம்
Nouvelle Fédération-Board
உருவாக்கம்12 டிசம்பர் 2003
வகைகாற்பந்துக் கழகம்
தலைமையகம்லீச், பெல்ஜியம்
உறுப்பினர்கள்
27 உறுப்பினர்கள்[1]
தலைவர்
கிறித்தியன் மெசெலிசு
வலைத்தளம்www.nf-board.com

இக்கழகம் வீவா உலகக்கோப்பையை நடத்தி வருகிறது. இதன் முதலாவது போட்டி 2006 நவம்பரில் ஒக்சித்தானியாவில் இடம்பெற்றது.[3] 5வது 2012 வீவா உலகக்கோப்பை 2012 சூன் மாதத்தில் குர்திஸ்தானில் நடைபெற்றது. தமிழீழக் காற்பந்து அணி உட்பட 9 அணிகள் பங்குபற்றின.[4]

2007 சூலையில் தென் அமெரிக்காவில் உள்ள ஃபீஃபா-அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு இக்கழகத்தில் அங்கத்துவம் பெற்றது.[5]

உறுப்பினர்கள்

இணைக்கப்பெற்ற உறுப்பினர்கள்

இணைப்புற்ற உறுப்பினர்கள்

தற்காலிக உறுப்பினர்கள்

பெண்கள் அணிகள்

பின்வரும் அணிகள் பெண்களுக்கான வீவா உலகப்போட்டியில் பங்குபற்றின:

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.