பிளாவியா பென்னட்டா
பிளாவியா பென்னட்டா (Flavia Pennetta; பிறப்பு: 25 பெப்ரவரி 1982) இத்தாலிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 17 ஆகத்து 2009 அன்று இத்தாலியின் முதல் பத்து மகளிர் ஒற்றையர் வீராங்கனைகளில் ஒருவராக விளங்கினார்; 28 பெப்ரவரி 2011 அன்று இத்தாலியின் மகளிர் இரட்டையர் விளையாட்டாளர்களில் முதல்வராக முன்னேறினார். 2015ஆம் ஆண்டின் அமெரிக்க ஓப்பனில் வெற்றி கண்டதன் மூலம் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் வாகையாளருமாவார். தமது வாழ்நாளின் ஒரே பெருவெற்றித் தொடர் வெற்றியை அடுத்து டென்னிசு ஆட்டத்திலிருந்து தமது ஓய்வை அறிவித்துள்ளார்.
![]() | ||
நாடு | ![]() | |
வசிப்பிடம் | வெர்பியெ, சுவிட்சர்லாந்து | |
பிறந்த திகதி | 25 பெப்ரவரி 1982 | |
பிறந்த இடம் | பிரின்டிசி, அப்புலியா, இத்தாலி | |
உயரம் | 1.72 மீட்டர்கள் (5 ft 8 in) | |
நிறை | 58 kg (128 lb; 9.1 st) | |
தொழில்ரீதியாக விளையாடியது | 25 பெப்ரவரி 2000 | |
விளையாட்டுகள் | வலது-கையாளர் (இரு-கை பின்னாட்டம்) | |
வெற்றிப் பணம் | US$ 13,808,145 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 578–361 (61.55%) | |
பெற்ற பட்டங்கள்: | 11 WTA, 7 ITF | |
அதி கூடிய தரவரிசை: | No. 8 (14 செப்டம்பர் 2015) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | கா.இ (2014) | |
பிரெஞ்சு ஓப்பன் | 4ம் சுற்று (2008, 2010, 2015) | |
விம்பிள்டன் | 4ம் சுற்று (2005, 2006, 2013) | |
அமெரிக்க ஓப்பன் | வெற்றி (2015) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 392–242 (61.83%) | |
பெற்ற பட்டங்கள்: | 17 WTA, 9 ITF | |
அதிகூடிய தரவரிசை: | எண். 1 (28 பெப்ரவரி 2011) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (2011) | |
பிரெஞ்சு ஓப்பன் | காலிறுதி (2010, 2015) | |
விம்பிள்டன் | அரையிறுதி (2010, 2012) | |
அமெரிக்க ஓப்பன் | இறுதி (2005, 2014)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 14 செப்டம்பர் 2015. |
பென்னட்டா ஆட்டவாழ்வில் பதினோரு முறை மகளிர் டென்னிசு சங்க ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். இவற்றில் 2014 இந்தியன் வெல்சு போட்டியின்போது உலகளவில் மூன்றாம் நிலைக்குள்ளிருந்த இருவரை வென்று இக்கோப்பையைக் கைப்பற்றினார். பெடரேசன் கோப்பை ஆட்டங்களில் இவர் இத்தாலியின் முதன்மை போட்டியாளராக விளங்கினார். இத்தாலி நான்கு முறை (2006, 2009–10, 2013 ஆண்டுகளில்) இக்கோப்பையை வெல்வதற்கு பெரிதும் துணையாக இருந்துள்ளார்.
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் நாயகிகளான ஜஸ்டின் ஹெனின், மேரி பியர்சு, மார்டினா ஹிங்கிஸ், அமேலி மாரெசுமோ, வீனஸ் வில்லியம்ஸ், இசுவெத்லனா குசுநெட்சோவா, விக்டோரியா அசரென்கா, சமந்தா ஸ்டோசர், லீ நா, பெத்ரா கிவிதோவா மற்றும் மரியா சரப்போவா போன்ற பலரை வென்றுள்ளார். வீனசு வில்லியம்சை அடுத்தடுத்த மூன்று ஆட்டங்களில் வென்ற ஏழே பெண்களில் இவரும் ஒருவர்.[1] இரட்டையர் ஆட்டங்களில் தனது முதல் பெருவெற்றித் தொடர் வெற்றியை 2011இல் பெற்றார்; அவ்வாண்டு ஆஸ்திரேலிய ஒப்பனில் கிசெலா டுல்கோவுடன் இணைந்து கோப்பையை வென்றார். தவிரவும் 2005 ஆண்டு அமெரிக்க இரட்டையர் இறுதியாட்டத்திலும் 2014ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டையர் இறுதியாட்டத்திலும் ஆடியுள்ளார். சென்ற ஆண்டு இவரது இரட்டையர் இணையராக மார்டினா ஹிங்கிஸ் இருந்தார். 2015ஆம் ஆண்டில் அமெரிக்க ஓப்பன் இறுதியாட்டத்தில் தனது நாட்டு சகா இராபெர்த்தொ வின்ச்சியை வெற்றி கண்டு தமது முதல் பெருவெற்றித் தொடர் வெற்றியை பதிவு செய்தார். இந்த இறுதியாட்டத்தின் முடிவில் இந்தப் பருவத்தின் இறுதியிலிருந்து தாம் ஆட்டத்திலிருந்து விலகவிருப்பதாக அறிவித்தார்.
24 சனவரி 2007 அன்று அன்றைய இத்தாலியக் குடியரசுத் தலைவர் கார்லோ அசெக்லியோ சியாம்பி பென்னட்டாவிற்கு குடியரசின் சீர்மிக்க விருதினை (Knight of Order of Merit of the Republic) வழங்கி கௌரவித்தார்.[2]