பிளாண்டர்சு
பிளாண்டர்சு (Flanders, டச்சு: Vlaanderen [ˈvlaːndərə(n)] (
ஃபிளாண்டர்சு விளாந்திரன் | |||
---|---|---|---|
பெல்ஜியப் பகுதி | |||
| |||
பண்: தெ விலாம்ச லிய்யு ("ஃபிளம்மியர்களின் சிங்கம்") | |||
![]() தற்கால பெல்ஜியத்தில் பிளாண்டர்சு (அடர் பச்சை) பெல்ஜியத்தினுள்ளும் ஐரோப்பாவிலும் காட்டப்பட்டுள்ளது. பிரசெல்சு சிலநேரங்களில் பிளாண்டர்சின் அங்கமாகவும் சில நேரங்களில் தனித்தும் கருதப்படுகின்றது. | |||
நாடு | பெல்ஜியம் | ||
பிளாண்டர்சு கவுன்ட்டி | 862–1795 | ||
பெல்ஜியத்தில் ஃபிளம்மியர் மாவட்டம் | 1970 | ||
பெல்ஜியத்தின் ஃபிளம்மியர் மண்டலம் | 1980 | ||
தொகுதி | பிரசெல்சு | ||
பரப்பளவு | |||
• நிலம் | 13,522 | ||
மக்கள்தொகை (1 சனவரி 2015) | |||
• மொத்தம் | 64,44,127 | ||
• அடர்த்தி | 477 | ||
இனங்கள் | ஃபிளம்மியர் (உரிச்சொல்), ஃபிளெமிங் (நபர்) விலாம்சு (உரிச்சொல்), விலாமிங் (நபர்) | ||
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) | ||
• கோடை (பசேநே) | ம.ஐ.கோ.நே (ஒசநே+2) | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | BE-VLG | ||
இணையதளம் | www.vlaanderen.be | ||
பரப்பளவும் மக்கள்தொகையும் பிளாண்டர்சு மண்டலத்திற்கானது. |
பரப்பளவைப் பொருத்து இது பெல்ஜியத்தின் மிகப்பெரும் பகுதியில்லாவிடினும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக, பெல்ஜியத்தின் 11,491,346 பேரில் 7,876,873 பேர் (68.5%) (பிரசெல்சு நகரின் இடச்சு பேசும் பிளெமியப் பகுதிகளை உள்ளிட) இங்கு வசிக்கின்றனர்.
இடைக்காலத்தில் "ஃபிளாண்டர்சு கவுன்ட்டி" என்பது கிபி 900இல் டோவர் நீரிணையிலிருந்து செல்ட் ஆறு கயவாய் வரை இருந்த பகுதியாகும்; இது மேலும் விரிவாக்கப்பட்டது. இந்த கவுண்ட்டி தற்போதைய பெல்ஜியத்தில் உள்ள கிழக்கு பிளாண்டர்சையும் மேற்கு பிளாண்டர்சையும் ஒன்றுசேர்த்தப் பகுதியுடன் அடுத்துள்ள பிரான்சு, நெதர்லாந்து பகுதிகளும் இணைந்தது. பழைய நிலப்பகுதி வரையறை இன்னமும் பொருந்தும் என்றாலும் பிளாண்டர்சு என்ற சொல் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் இடச்சு பேசும் மியூசே ஆறு வரையான அனைத்துப் பகுதிகளையுமே குறிக்கப் பயன்படுத்தப்படலாயிற்று. தவிரவும் பிளெமிசக் கலை என்பது இடச்சு பேசும் மக்களின் கலை என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தற்கப்பால் பெல்ஜிய நாட்டினுள் உள்ள பிளாண்டர்சு பகுதி இரண்டு அரசியல் அமைப்புகளாக வரையறுக்கப்பட்டன.: "பிளெமிச சமூகம்" (டச்சு: Vlaamse Gemeenschap), "பிளெமிச மண்டலம்" (டச்சு: Vlaams Gewest). இவை இரண்டும் இணைக்கப்பட்டன, இருப்பினும் புவியியல்படி பிளெமிச சமூகம் பிரசெல்சை உள்ளடக்கும், பிளெமிச மண்டலம் உள்ளடக்காது.
எந்த வரையறையானாலும், பிளாண்டர்சு ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையாக இருந்துள்ளது. நடுக்காலத்தின் பிற்பகுதியில் கென்ட், புர்ஜெசு, ஆண்ட்வெர்ப், பிரசெல்சு போன்ற நகரங்கள் ஐரோப்பாவின் மிகவும் செல்வச்செழிப்புள்ள நகரியமாக்கப்பட்டவையாக விளங்கின. அடுத்துள்ள பகுதிகளிலிருந்த கம்பளியை நெய்து துணித் தயாரித்தன; உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமன்றி ஏற்றுமதியும் செய்தன. இதனால் மிகவும் உயர்தர பண்பாடு உருவானது; கலை, கட்டிடக்கலை ஆகியவற்றில் இத்தாலிக்கு இணையான மேம்பாட்டை எட்டியிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி மையங்களில் ஒன்றாக பெல்ஜியம் விளங்கியது. இதற்கு முன்பே பிளாண்டர்சை பிரான்சியம் பேசிய வல்லோனியா கைப்பற்றியது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிளாண்டர்சின் பொருளியல் விரைவாக வளர்ந்தது. இன்றைய நாளில் பிளாண்டர்சு குறிப்பிடத்தகளவில் தெற்கத்தியப் பகுதிகளை விட செல்வச் செழிப்புடன் உள்ளது. பொதுவாகவும் ஐரோப்பா மற்றும் உலகின் செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றது.[2]
புவியியல்படி, பிளாண்டர்சு பொதுவாக சமவெளியாகும். வடக்கு கடலை ஒட்டி சிறியக் கடலோரம் உள்ளது. பிளாண்டர்சின் பெரும்பகுதி பயிரிட்டு வேளாண்மை செய்யத் தகுந்தது. அடர்ந்த மக்கள்தொகை உடைய இதன் மக்களடர்த்தி சதுர கி.மீக்கு 500 பேராக (சதுர மைலுக்கு 1200 பேர்) உள்ளது. மேற்கில் பிரான்சுடனும் வடக்கிலும் கிழக்கிலும் நெதர்லாந்துடனும் தெற்கில் வல்லோனியாவுடனும் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. அலுவல்முறையாக இருமொழியுடைய பிரசெல்சு பிளாண்டர்சு பகுதிக்குள் அடைபட்டுள்ளது. கிழக்கில் வல்லோனியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையே அடைபட்டுள்ள வோரேனும் வடக்கே உள்ள பார்லே-எர்டோகும் (இதன் 22 பகுதிகளை நெதர்லாந்து சூழ்ந்துள்ளது) இதன் வெளிப்புறப் பகுதிகளாகும்.
மேற்சான்றுகள்
- "Discover Flanders".
- "Belgium". U.S. Department of State. பார்த்த நாள் 21 June 2015.