ஒ.ச.நே. ஈடுசெய்தல்

ஒ. ச. நே. ஈடுசெய்தல் (UTC offset) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் குறிப்பிட்ட நாளில் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திலிருந்து வேறுபடுகின்ற மணி மற்றும் நிமிடங்களைக் குறிக்கின்றது. பொதுவாக இந்நேர வேறுபாடு (+ அல்லது -) குறியீகள் மூலமாக குறிக்கப்படுகிறது. எனவே ,ஒரு இடத்தில் நிலவுகின்ற நேரமானது ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னால் இருக்கிறது என்றால் ( குளிர்காலத்தில் பெர்லினில் இருக்கும் நேரத்தைப் போல) அதை ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திற்கு ஈடு செய்யும் பொருட்டு "+01:00", "+0100", அல்லது சாதாரணமாக "+01" என்று குறிக்கப்படுகிறது.

நேர வலயம் மற்றும் நேரமீடுசெய்தல்

நேர வலயம் என்பது ஒரு நிலவியற் பகுதியில் உள்ள அனைவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தை உணர்வதைக் குறிக்கும்.

நேரமீடுசெய்தல் என்பது ஒரு நிலவியற்பகுதியில் நிலவும் நேரத்தை , ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்திற்குச் சமமான நேரமாகக் குறிப்பிடும்பொருட்டு கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்கின்ற நேரத்தின் அளவாகும். அந்நேரம் பகலொளி சேமிப்பு நேரம் அல்லது திட்ட நேரம் என்பவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.

ஏதாவதொரு குறிப்பிட்ட நேர வலயத்தில் வசிப்பவர்கள் ( உருசியா அல்லது தென் ஆப்பிரிக்கா போல) திட்ட நேரத்தை ஆண்டு முழுவதுமோ அல்லது கோடைகாலத்தின் பகல் பொழுது மற்றும் குளிர்காலத்திலோ கண்காணிக்க இயலும்.

பகலொளி சேமிப்பு நேரம்

வட அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் ஆத்திரேலியா போன்ற பல நாடுகளில் பகலொளி சேமிப்பு நேரம் பயன்படுத்தப்படுகிறது. பகலொளி சேமிப்பு நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் திட்ட நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். மத்திய ஐரோப்பிய நேரம் ஒ. ச. நே + 01:00 என்பது மத்திய ஐரோப்பிய கோடை நேரம் ஒ. ச. நே + 02:00 என்று மாற்றப்படுகிறது மற்றும் பசிபிக் திட்ட நேரம் ஒ. ச. நே 08:00 என்பது பசிபிக் பகலொளி நேரமாகவும் மாற்றப்படுகிறது.

இவற்றையும் காண்க

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.