பி. தாணுலிங்க நாடார்

பி. தாணுலிங்க நாடார் (P. Thanulinga Nadar) (17 பிப்ரவரி 1915 – 2 நவம்பர் 1988), இந்திய அரசியல்வாதியும், கன்னியாகுமரி விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும், இந்து முன்னணியின் தமிழகத் தலைவராகவும் இருந்தவர்.

பரமார்த்தலிங்க தாணுலிங்க நாடார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (நாகர்கோவில் மக்களவைத் தொகுதி)
பதவியில்
1957–1962
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 17, 1915(1915-02-17)
திருவிதாங்கூர் இராச்சியம், கேரளா
இறப்பு 2 நவம்பர் 1988(1988-11-02) (அகவை 73)
ஏரல், தூத்துக்குடி மாவட்டம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
இந்து முன்னணி
தொழில் அரசியல்வாதி
இந்து இயக்க செயற்பாட்டாளர்
சமயம் இந்து

இளமை

தாணுலிங்கம், 17 பிப்ரவரி 1915ல் எம். பராமார்த்த லிங்கம் என்பவருக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தற்கால அகத்தீஸ்வரம் வட்டம், பொற்றையடி கிராமத்தில் பிறந்தவர்.[1] இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் சட்டப் படிப்பை முடித்த தாணுலிங்கம் ஏ. நேசமணியால் ஈர்க்கப்படு, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் காமராசரால் ஈர்க்கப்பட்டு, 1956ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

அரசியல்

இளமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். ஏ. நேசமணி நிறுவிய திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் இணைந்து, குமரி விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டார்.

தாணுலிங்க நாடார், அகஸ்தீஸ்வரம் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து, 1948, 1951 மற்றும் 1954ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.[1][2]

1957ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, தாணுலிங்க நாடார், நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

தாணுலிங்க நாடார், 9 சூலை 1964 முதல் 2 ஏப்ரல் 1968 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர்.[1]

இந்து முன்னணி தலைவராக

தாணுலிங்க நாடார், 16 மார்ச்1982ல் இந்துத்துவா இயக்கமான இந்து முன்னணியின் தமிழகத் தலைவராக, தமது 73வது அகவை வரை பணியாற்றியவர். மண்டைக்காடு கலவரத்தின் போது தாணுலிங்க நாடார் 17 பிப்ரவரி 1983ல் கைது செய்யப்பட்டார்.[5]

குடும்பம்

தாணுலிங்க நாடார், இளம் வயதில் மணந்த நட்சத்திரம்மாளின் மறைவிற்குப் பின் இராமநாயகம் அம்மாளை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.