பாவாபுரி

பாவாபுரி (Pawapuri) (இந்தி: पावापुरी) சமணர்களின் புனிதமான இத்தலம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. பாவாபுரி நகரம், ராஜகிரகத்திலிருந்து 19 கிமீ தொலைவிலும், பிகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 101 கிமீ தொலைவிலும் உள்ளது. [1]பாவாபுரி நகரத்தில் மகாவீரர் மறைந்தார். மகாவீரருக்கு அர்பணிக்கப்பட்ட ஜல் மந்திர் இந்நகரத்தில் உள்ளது.

Pawapuri पावापुरी

பாவாபுரி
पावापुरी
நகரம்
பாவாபுரியில் சமணர்களின் நீர்க்கோயில்
பாவாபுரி
பாவாபுரி
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாவாபுரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°05′30″N 85°32′20″E
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்நாலந்தா
நிர்மாணித்தவர்இராஜா தருமபாலன்
மொழிகள்
  அலுவல் மொழிகள்மகதி மொழி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகமைந்த நகரம்பாட்னா
இணையதளம்www.pawapuritirth.org

வரலாறு

மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆட்சிக் காலத்தில், மகாவீரர் பாவாபுரிக்கு வருகை புரிந்த போது, பாவாபுரியின் குறுநில மன்னர் ஹஸ்திபாலனுடன் தங்கியிருந்தார். [2]

மகாவீரர் பரிநிர்வானம் எய்திய பின்னர் பாவாபுரியில் அவரது உடல் எரிக்கப்பட்டது. [3]மகாவீரரின் சாம்பலை மக்கள் கூட்டம் கூட்டமாக அள்ளிச் சென்றதால், அவ்விடம் பள்ளமாகி ஒரு குளம் போல் காட்சியளித்தது. [4]

தற்போது அக்குளத்தின் நடுவே ஜல் மந்திர் எனும் பெயரில் மகாவீரருக்கு கோயில் எழுப்பட்டுள்ளது. மகாவீரர் இறுதியாக மக்களுக்கு தருமத்தை உபதேசித்த பாவாபுரியில், கோன் மற்றும் சமோசரன் போன்ற சமணக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. [4]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Destinations :: Pawapuri ::Bihar State Tourism Development Corporation". Bstdc.bih.nic.in. பார்த்த நாள் 2012-03-05.
  2. "Digambar Jain temple Pavapuri or Pawapuri". Digambarjainonline.com. பார்த்த நாள் 2012-03-05.
  3. http://www.pawapuritirth.org
  4. "Bihar State Tourism Development Corporation". Pawapuri. பார்த்த நாள் 2009-03-14.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.