பாலாஜி விஸ்வநாத்

பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் (Balaji Vishwanath) (1662–1720), சிவாஜி நிறுவிய மராத்தியப் பேரரசின் ஆறாவது தலைமை அமைச்சரும், கொங்கணி பட் பிராமண சமூகத்தின் முதல் பேஷ்வாவும் ஆவார். மராத்தியப் பேரரசர் சாகுஜியின் தலைமை அமைச்சராக விளங்கிய பாலாஜி விஸ்வநாத் காலத்தில், மராத்தியப் பேரரசு, அவுரங்கசீப் மற்றும் தக்காண சுல்தான்களையும் எதிர்த்து நின்றது.[1]இவருக்குப் பின் இவரது மகன் பாஜிராவ், மராத்திய பேஷ்வாவாகப் பொறுப்பு ஏற்றார். இவரது இரண்டாவது மகன் சிம்னாஜி அப்பா வசாய் கோட்டையைக் கைப்பற்றினார்.

பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்
மராத்தியப் பேரரசின் ஆறாவது பேஷ்வா
ஆட்சிக்காலம் 17 நவம்பர் 1713 – 12 ஏப்ரல் 1720
முன்னையவர் பாகிரோஜி பிங்களா
பின்னையவர் பாஜிராவ்
வாழ்க்கைத் துணை இராதாபாய்
வாரிசு
பாஜிராவ்
சிம்னாஜி அப்பா
பிகுபாய் ஜோஷி
அனுபாய் கோர்படே
முழுப்பெயர்
பந்தபரதான் ஸ்ரீமன் பாலாஜி (பல்லல்) விஸ்வநாத் (பட்) பேஷ்வா
குடும்பம் தேசஸ்த் பிராமணர்
தந்தை விஸ்வநாதபந்த் பட்
மரபு பேஷ்வா
பிறப்பு 1 சனவரி 1662
ஸ்ரீவர்தனம், கொங்கணம்
இறப்பு 12 ஏப்ரல் 1720
சஸ்வாட், மகாராட்டிரா
சமயம் இந்து

இளமையும் தொழிலும்

இளமையில் பாலாஜி விஸ்வநாத், மராத்தியப் பேரரசின் படைத்தலைவர் தானாஜி ஜாதவ்வின் கணக்காளராகப் பணியில் சேர்ந்தார். [2] 1699 மற்றும் 1702ல் புனே கோட்டையின் தலைமை நிர்வாகியாகவும், பின்னர் 1704 முதல் 1707 முடிய தௌலதாபாத் கோட்டையின் தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 1708ல் சத்திரபதி சாகுஜியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.[3][4]

பேஷ்வா பதவியில்

மராத்தியப் பேரரசின் பேஷ்வா பாஹிரோஜி பிங்களனை கைது செய்து பிணைக்கைதியாக வைத்திருந்த கப்பற்படைத்தலைவர் கனோஜி ஆங்கரேவுடன், பாலாஜி விஸ்வநாத் லோணாவ்ளா எனுமிடத்தில் சந்தித்து அமைதிப்படுத்தினார். பின்னர் கனோஜியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். கனோஜி ஆங்கரேவை மராத்தியப் பேரரசின் தலைமைக் கப்பற்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாலாஜி விஸ்வநாத்தின் திறைமையைப் பாராட்டிய மராத்திய பேரரசர் சாகுஜி, அவரையே தமது தலைமை அமைச்சராக 16 நவம்பர் 1713 அன்று நியமித்துக் கொண்டார். [5],[6].

1719ல் பாலாஜி விஸ்வநாத் தலைமையில் சென்ற மராத்தியப் படைகள், தில்லி நோக்கிப் படையெடுத்து, முகலாயப் பேரரசின் தூண்களை சரித்தார். [7]

வட இந்தியா மீதான படையெடுப்புகள்

1707 அவுரங்கசீப் மறைவிற்குப் பின் முகலாயப் பேரரசராக பதவி ஏற்ற பகதூர் ஷாவினால் முகலாய அரச குடும்பத்தில் பல குழப்பங்களும், சதித் திட்டங்களும் நிறைவேறின. 1713ல் முகலாய அரசவைப் பிரபுக்களான சையத் உசைன் அலி கான் மற்றும் சையத் அப்துல்லா கான் ஆகியோரின் உதவியால் தில்லியின் அரியணை ஏறினார் பரூக்சியார் .

1718ல் மராத்தியர்களை ஒடுக்க, சையத் உசைன் அலி கான் தக்காண ஆளுநராக நியமிக்கப்பட்டார். பாலாஜி விஸ்வநாத் தலைமையிலான மராத்தியப் படைகள் கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் சையத் உசைன் அலி கான் படைகளை வென்றனர். போரில் தோல்வி அடைந்த முகலாயர்களின் தக்கான ஆளுநர், பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தக்கானப் பிரதேசத்தில் சௌத் வரி (நாலில் ஒரு பங்கு) நில வரியும், சர்தேஷ்முக் எனும் பத்தில் ஒரு பங்கு கூடுதல் வரியையும் வசூலித்துக் கொள்ளும் உரிமை மராத்தியப் பேரரசிற்கு கிடைத்தது.

ஆனால் இவ்வொப்பந்தத்தை ஏற்காத தில்லிப் பேரரசர் பரூக்சியார், சையத் குடும்பத்தினரைக் கொல்ல உத்தரவிட்டார். இதனால் கோபமடைந்த சையத் குடும்பத்தினர், பாலாஜி விஸ்வநாத் படைகளுடன் தில்லி சென்று, முகலாயப் பேரரசர் பருக்சியாரை அரியணையிலிருந்து இறக்கி, பிப்ரவரி 1719ல் ரபி உல்-தர்ஜாத் என்ற சிறுவனை பொம்மை அரசனாக்கி, தக்கான உடன்படிக்கையை ஏற்க வைத்தனர். மேலும் சத்திரபதி சாகுஜியையும், அவரது வழித்தோன்றல்களையும் மராத்திய பேரரசர்களாக, தில்லி முகலாயர்கள் அங்கீகாரம் வழங்கினர். [8]..

முன்னர்
பாகிரோஜி பிங்களா
பேஷ்வா
1713–1720
பின்னர்
பாஜிராவ்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 202–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.
  2. Gazetteer of the Bombay Presidency, Volume XIX, SATARA, 1885, p. 254
  3. Jasvant Lal Mehta, Advanced study in the history of modern India 1707–1803, ISBN 1-932705-54-6
  4. Haig L, t-Colonel Sir Wolseley (1967). The Cambridge History of India. Volume 3 (III). Turks and Afghans. Cambridge UK: Cambridge University press. பக். 392-396. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781343884571. https://books.google.com/books?hl=en&lr=&id=yoI8AAAAIAAJ&oi=fnd&pg=PA1&dq=%22SAyYID+BROTHERS%22+balaji+vishwanath&ots=iR8wa6PKEc&sig=3GGKczzZ_c70zmMi-rruZ4jjYu0#v=snippet&q=shahu%20%20balaji%20vishwanath&f=false. பார்த்த நாள்: 12 May 2017.
  5. Kincaid & Parasnis, p.156
  6. Haig L, t-Colonel Sir Wolseley (1967). The Cambridge History of India. Volume 3 (III). Turks and Afghans. Cambridge UK: Cambridge University press. பக். 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781343884571. https://books.google.com/books?hl=en&lr=&id=yoI8AAAAIAAJ&oi=fnd&pg=PA1&dq=%22SAyYID+BROTHERS%22+balaji+vishwanath&ots=iR8wa6PKEc&sig=3GGKczzZ_c70zmMi-rruZ4jjYu0#v=snippet&q=shahu%20%20balaji%20vishwanath&f=false. பார்த்த நாள்: 12 May 2017.
  7. An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.12
  8. Haig L, t-Colonel Sir Wolseley (1967). The Cambridge History of India. Volume 3 (III). Turks and Afghans. Cambridge UK: Cambridge University press. பக். 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781343884571. https://books.google.com/books?hl=en&lr=&id=yoI8AAAAIAAJ&oi=fnd&pg=PA1&dq=%22SAyYID+BROTHERS%22+balaji+vishwanath&ots=iR8wa6PKEc&sig=3GGKczzZ_c70zmMi-rruZ4jjYu0#v=snippet&q=shahu%20%20balaji%20vishwanath&f=false. பார்த்த நாள்: 12 May 2017.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.