மின்காந்தத் தூண்டல்

மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்பது, ஒரு கடத்தி மாறும் காந்தப்பாயத்திற்கு ஆட்படும்போது, அக்கடத்தியின் இரு முனைகளுக்கிடையே மின்னழுத்தம் உண்டாகும் நிகழ்வைக் குறிக்கிறது. பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள் ( Faraday's law of electromagnetic induction ) இரு நிலைப்படும்.

வரலாறு

1831ல் மைக்கெல் ஃபாரடே[1][2] என்பார் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. 1832ல் ஜோசப் ஹென்றி என்பாரும் சார்பில்லாமல் இதனை கண்டுபிடித்ததாகவும் அறியப்படுகிறது.[3][4] ஆனால் ஃபாரடே தான் முதலில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

ஒரு மூடப்பட்ட சுற்று காந்தப் பாயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும்போது, அக்காந்தப் பாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதன் விளைவாக அச்சுற்றில் தூண்டப்படும் மின்னழுத்தம் அதில் மின்னோட்டத்தைத் தூண்டுகிறது. அவ்வாறு உருவாகும் மின்னழுத்தத்தைத் தூண்டப்பட்ட மின் இயக்கு விசை எனவும், அப்போது அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தைத் தூண்டப்பட்ட மின்னோட்டம் என்றும் அழைப்பர்.

மேற்கோள்கள்

  1. Ulaby, Fawwaz (2007). Fundamentals of applied electromagnetics (5th ). Pearson:Prentice Hall. பக். 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-241326-4. http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0132413264/ref=ord_cart_shr?%5Fencoding=UTF8&m=ATVPDKIKX0DER&v=glance.
  2. "Joseph Henry". Distinguished Members Gallery, National Academy of Sciences. பார்த்த நாள் 2006-11-30.
  3. "A Brief History of Electromagnetism".
  4. "Electromagnetism". Smithsonian Institution Archives.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.