பாப் ஹாக்

பாப் ஹாக் (Bob Hawke) என அழைக்கப்படும் இராபர்ட் யேம்சு லீ ஹாக் (Robert James Lee Hawke, 9 டிசம்பர் 1929 – 16 மே 2019) ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 1983 முதல் 1991 வரை 23-வது ஆத்திரேலியப் பிரதமராகவும், ஆத்திரேலியத் தொழில் கட்சித் தலைவராகவும் பதவியில் இருந்தார். ஆத்திரேலியாவில் நீண்ட காலம் பதவி வகித்த தொழிற்கட்சிப் பிரதமர் இவராவார்.

பாப் ஹாக்
Bob Hawke
ஆத்திரேலியாவின் 23-வது பிரதமர்
பதவியில்
11 மார்ச் 1983  20 டிசம்பர் 1991
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் நினியன் இசுடீவன்
பில் ஏய்டென்
முன்னவர் மால்கம் பிரேசர்
பின்வந்தவர் பவுல் கீட்டிங்
தொழிற் கட்சித் தலைவர்
பதவியில்
3 பெப்ரவரி 1983  20 டிசம்பர் 1991
முன்னவர் பில் ஏய்டென்
பின்வந்தவர் பவுல் கீட்டிங்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
3 பெப்ரவரி 1983  11 மார்ச் 1983
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் நினியன் இசுட்டீவன்
பிரதமர் மால்கம் பிரேசர்
முன்னவர் பில் ஏய்டென்
பின்வந்தவர் ஆன்ட்ரூ பீக்கொக்
வில்சு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
18 அக்டோபர் 1980  20 பெப்ரவரி 1992
முன்னவர் கோர்டன் பிரயண்ட்
பின்வந்தவர் பில் கிளியரி
தனிநபர் தகவல்
பிறப்பு ராபர்ட் யேம்சு லீ ஹாக்
திசம்பர் 9, 1929(1929-12-09)

[1]
போர்டர்டவுன், தெற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா

இறப்பு 16 மே 2019(2019-05-16) (அகவை 89)[2]
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
அரசியல் கட்சி தொழிற் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஏசல் (1956-1994, மணமுறிவு)
பிளாஞ்சி (1995-2019)
பிள்ளைகள் 4
பெற்றோர் கிளெம் ஹோக்,
எடித் லீ
இருப்பிடம் நோர்த்பிரிட்ச், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணி தொழிற்சங்க இயக்குநர்
(ஆத்திரேலிய தொழிற்சங்கங்களின் பேரவை)
இணையம்

பாப் ஹாக் தெற்கு ஆஸ்திரேலியாவில் பிறந்து, சிறு வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு, புலமைப் பரிசில் பெற்று ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் சென்றார். 1956 இல், இவர் ஆத்திரேலியத் தொழிற்சங்கப் பேரவையில் ஆய்வாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 1969 இல் தொழிற்சங்கங்களின் தலைவராகத் தெரிவானார். 1980 இல் அரசியலில் நுழைந்த இவர் அதே ஆண்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1983 இல், தொழிற் கட்சியின் தலைவராக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இத்தேர்தலில் தொழிற் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாப் ஹாக் 23-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 1984, 1987, 1990 ஆகிய தேர்தலக்ளிலும் வெற்றி பெற்று பிரதமரானார். இவரது அரசின் காலத்தில் ஏப்பெக் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1986 ஆத்திரேலியா சட்டத்தை நிரைவேற்றப் பெரும் பங்கு வகித்தார். இதன் மூலம் ஆத்திரேலியாவுக்கு [[ஐக்கிய இராச்சியம்}|ஐக்கிய இராச்சியத்துடன்]] இருந்த சட்ட உரிமைகள் நீக்கப்பட்டன.[3] 1991 இல் இவர் தொழிற்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை அடுத்து, துனைத் தலைவராக இருந்த பவுல் கீட்டிங் பிரதமரானார்.

ஆத்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2019 மே 16 இல் பாப் ஹாக் காலமானார்.[4][5] இவர் பவுல் கீட்டிங்குடன் இணைந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தார்.[6]

மேற்கோள்கள்

  1. Profile of Bob Hawke
  2. "Labor legend Bob Hawke dies aged 89". பார்த்த நாள் 16 May 2019.
  3. "Australia Act (Commencement) Order 1986". பார்த்த நாள் 23 January 2016.
  4. "Labor legend Bob Hawke dies aged 89". Sydney Morning Herald (16 May 2019). பார்த்த நாள் 16 May 2019.
  5. "Bob Hawke, Australia's 23rd prime minister, dies aged 89". Australian Broadcasting Corporation (16 May 2019). பார்த்த நாள் 16 May 2019.
  6. "Bob Hawke and Paul Keating reunite for the first time in 28 years to endorse Labor's economic plan". Sydney Morning Herald (7 May 2019). பார்த்த நாள் 16 May 2019.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.