பா. ரஞ்சித்
பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.[2]
பா. இரஞ்சித் | |
---|---|
![]() | |
பிறப்பு | டிசம்பர் 8 கரலப்பாக்கம், சென்னைதமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் திரைக்கதை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2012-தற்போது வரை |
அறியப்படுவது | அட்டகத்தி மெட்ராஸ் |
தொழில் வாழ்க்கை
ரஞ்சித் டிசம்பர் 8, 1982 இல் கரலபாக்கம், ஆவடி, சென்னையில் பிறந்தார்.[3] சென்னையில் உள்ள அரசு கவின் கலைகள் கல்லூரியில் பயின்றார். கல்லூரிக்குச் செல்லும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களே தனது திரைப்படங்களுக்கு உந்துதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.[2]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | நன்மதிப்பின் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
திரைப்பட இயக்கம் | திரைக்கதை | ||||
2012 | அட்டகத்தி | ![]() | ![]() | தமிழ் | சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர் |
2014 | மெட்ராஸ் | ![]() | ![]() | தமிழ் | சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை), |
2015 | கபாலி | ![]() | ![]() | தமிழ் | |
2016 | லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் | ![]() |
![]() |
![]() |
விபரணத் திரைப்படம்[4] |
2018 | பரியேறும் பெருமாள் | ![]() |
![]() |
![]() |
|
2018 | காலா | ![]() |
![]() |
தமிழ் |
- "I don’t want to be known as a Dalit filmmaker: Kabali director" (in en-US). The Indian Express. 2016-07-29. http://indianexpress.com/article/entertainment/regional/kabali-rajinikanth-dalit-director-2942155/.
- "Madras Story: The Pa Ranjith interview - Silverscreen.in" (in en-US). Silverscreen.in. 2014-11-04. http://silverscreen.in/features/interviews/the-madras-story-the-pa-ranjith-interview/.
- Vignesh (in en-US), Pa Ranjith (Director) Wiki, Age, Biography, Caste, Family, Photos - Scooptimes, https://www.scooptimes.com/biography/pa-ranjith-wiki-age-caste/5854, பார்த்த நாள்: 2018-06-13
- "from Chennai, an anthem for lesbian love" (2 April 2017).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.