பல்மைரா

பல்மைரா (Palmyra, /ˌpælˈmaɪərə/, அரபு மொழி: تدمر; எபிரேயம்: תַּדְמוֹר; பண்டைக் கிரேக்கம்: Παλμύρα), சிரியா நாட்டில் ஓம்சு ஆளுநரகப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான செமித்திய நகரமாகும். திமிஷ்குவிற்கு வடகிழக்கே 215 கிலோமீட்டர்கள் (134 மைல்கள்) தொலைவிலும் புராத்து ஆற்றின் தென்மேற்கே 180 km (110 mi) தொலைவிலும் அமைந்துள்ள இது ஓர் பாலைவனச்சோலை ஆகும். புதிய கற்காலத்தில் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டுகளிலேயே பல்மைரா சிரியாவின் பாலைவனத்தில் பயணிக்கும் பயணிகள் ஓய்வெடுக்கும் ஊராக விவரிக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அசிரிய மன்னர்கள் ஆண்ட இந்நகரம் செலுக்கட் பேரரசின் கீழும் பின்னர் உரோமைப் பேரரசு கீழும் பெரும் செழிப்புடன் விளங்கியது.

பல்மைரா
ܬܕܡܘܪܬܐ (அரமேயம்)
تدمر (அரபு மொழி)
பல்மைரா வரலாற்றுத் தளம்.
Shown within Syria
மாற்றுப் பெயர்தட்மூர்
இருப்பிடம்தட்மூர், ஓம்சு ஆளுநரகம், சிரியா
பகுதிசிரியப் பாலைவனம்
ஆயத்தொலைகள்34°33′36″N 38°16′2″E
வகைகுடியிருப்பு
பரப்பளவு50 ha (120 ஏக்கர்கள்)
வரலாறு
கட்டப்பட்டதுகி.மு 2ஆம் ஆயிரவாண்டு
பயனற்றுப்போனதுகி.பி 1932
காலம்வெண்கலக் காலம் முதல் புதுமைக் காலம் வரை
கலாச்சாரம்அராமிய, அராபிய, கிரேக்க-உரோமை பண்பாடுகள்
பகுதிக் குறிப்புகள்
நிலைஅழிபட்டது
உரிமையாளர்பொது
பொது அனுமதிஆம்
Official name: பல்மைரா இருப்பிடம்
TypeCultural
Criteriai, ii, iv
Designated1980 (4வது அமர்வு)
Reference No.23
State Party சிரியா
Regionஅரபு நாடுகள்

1929ஆம் ஆண்டிலிருந்து இது பயனற்றுப் போனது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1980ஆம் ஆண்டில் இக்களத்தை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

இதன் பெயர் செமித்திய மொழியில் தட்மூர் (அரபு மொழி: تدمر) ஆகும். அரமேயத்தில்,[1] இதன் பொருள் "வெல்ல முடியாத நகரம்" என்பதாகும்.[2] இப்பெயருடனான பபிலோனிய கற்றூண்கள் சிரியாவின் மாரி பகுதியில் கிடைத்துள்ளன. இன்றும் அராபிய மொழியில் இது தட்மூர் என்றே அழைக்கப்படுகின்றது.[3][4]

பல்மைரா நினைவுச்சின்ன அழிப்புகள்

சிரியாவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு அமைப்பினர், வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் பல்மைராவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.[5] [6][7] [8] இது ஒரு யுனெஸ்கோவின் பாரம்பரிய சினமாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.[9]

படக்காட்சிகள்

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

நூற்கோவை

  • Burns, Ross (1999). Monuments of Syria. London and New York: I.B. Tauris. பக். 162–175.
  • Isaac, Benjamin (2000). The Limits of Empire - the Roman Army in the East (revised ). Oxford: Clarendon Press.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.