பருத்தித்துறை நகரசபை

பருத்தித்துறை நகரசபை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

பருத்தித்துறை நகரசபை
வகை
வகைஉள்ளூராட்சி
தலைமை
தலைவர்சபாநாயகம் இரவீந்திரன், த. தே. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர்சிதம்பரப்பிள்ளை பத்மநாதன், த. தே. கூ
யூலை 2011 முதல்
உறுப்பினர்கள்9
தேர்தல்
இறுதித் தேர்தல்இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

தேர்தல் முடிவுகள்

1983 உள்ளூராட்சித் தேர்தல்கள்

18 மே 1983 இல் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 8271.30%7
 ஐக்கிய தேசியக் கட்சி 2723.48%2
சுயேச்சை 54.35%0
 நவ சமசமாசக் கட்சி 10.87%0
செல்லுபடியான வாக்குகள் 115100.00%9
செல்லாத வாக்குகள் 0
மொத்த வாக்குகள் 115
பதிவில் உள்ள வாக்காளர்கள் 10,928
வாக்களித்தோர் 1.05%

1998 உள்ளூராட்சித் தேர்தல்கள்

29 சனவரி 1998 இடம் பெற்ற தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 1,30158.18%6
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 65629.34%2
 தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 1577.02%1
 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 1225.46%0
செல்லுபடியான வாக்குகள் 2,236100.00%9
செல்லாத வாக்குகள் 374
மொத்த வாக்குகள் 2,610
பதிவில் உள்ள வாக்காளர்கள் 12,721
வாக்களித்தோர் 20.52%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்

23 யூலை 2011 அன்று இடம் பெற்ற தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3,26372.62%7
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 1,10724.64%2
 ஐக்கிய தேசியக் கட்சி 1152.56%0
சுயேச்சை 70.16%0
 மக்கள் விடுதலை முன்னணி 10.02%0
செல்லுபடியான வாக்குகள் 4,493100.00%9
செல்லாத வாக்குகள் 270
மொத்த வாக்குகள் 4,763
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,376
வாக்களித்தோர் 64.57%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,19937.20%6
 இலங்கைத் தமிழரசுக் கட்சி 1,88031.80%5
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 77713.14%2
சுயேச்சைக் குழு 4046.83%1
 தமிழர் விடுதலைக் கூட்டணி 4036.82%1
 சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 1001.69%0
 ஐக்கிய தேசியக் கட்சி 831.40%0
இலங்கை பொதுசன முன்னணி 661.12%0
செல்லுபடியான வாக்குகள் 5,912100.00%15
செல்லாத வாக்குகள் 69
பதிவான மொத்த வாக்குகள் 5,981
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,864
வாக்களித்தோர் 76.06%

மேற்கோள்கள்

  1. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University.
  2. "Election commissioner releases results". TamilNet (30 January 1998).
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488.
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Point Pedro Urban Council". Department of Elections, Sri Lanka.
  5. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Point Pedro Urban Council". Department of Elections, Sri Lanka.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.