பராகுவே ஆறு

பராகுவே ஆறு (Paraguay River) தென் அமெரிக்காவின் முக்கிய நதி ஆகும். பிரேசில், பொலிவியா, பராகுவே மற்றும் அர்சண்டினா ஆகிய நாடுகளின் வழியே பாய்கின்றது. பிரேசில் நாட்டின் மடோ குரோசோ-விலிருந்து பரானா ஆற்றில் சங்கமிக்கும் வரை 2,621 கி.மீ தூரம் பாய்கிறது[1].

பராகுவே ஆறு
இரியோ பராகுவே, இரியோ பராகுவே
River
அசன்சியான் அருகே பராகுவே ஆற்றின் படம்
நாடுகள் பராகுவே, பிரேசில், அர்சண்டினா, பொலிவியா
கிளையாறுகள்
 - இடம் இரோ நெக்ரோ, மிரண்டா ஆறு, குய்பா ஆறு, அபா ஆறு, டெபிகுயரி ஆறு
 - வலம் சவுறு ஆறு, பில்கோமயோ ஆறு, பெர்மிசோ ஆறு
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் பாரெசிச் பீடபூமி, மடோ குரோசோ, பிரேசில்
கழிமுகம் பரனா ஆறு
 - elevation 50 மீ (164 அடி)
நீளம் 2,621 கிமீ (1,629 மைல்) [1]
வடிநிலம் 3,65,592 கிமீ² (1,41,156 ச.மைல்) [1]
Discharge
 - சராசரி [1]
,இரியோ டி லா பிளாட வரைபடம், பராகுவே ஆறு, அசன்சியானிற்கு தெற்கே பரனா ஆற்றுடன் சேர்வதை கண்பிக்கின்றது.
,இரியோ டி லா பிளாட வரைபடம், பராகுவே ஆறு, அசன்சியானிற்கு தெற்கே பரனா ஆற்றுடன் சேர்வதை கண்பிக்கின்றது.

ஆற்றின் போக்கு

பராகுவே ஆற்றின் மூலம் பிரேசிலின் மடோ குரோசோ மாநிலத்தின் தெற்கே உள்ளது. பிரேசில் நகரின் காசிரெச் வழியே தென்-கிழக்காக பாய்கிறது. பின்பு கிழக்கே நொக்கி திரும்பி, பண்டனல் ஈரநிலத்தின் வழியே பாய்ந்து, பின்பு பிரேசிலின் மடோ குரோசோ மாநிலம் மற்றும் மடோ குரோசோ டொ சுல்லில் சிறிது தூரம் பிரேசில்-பொலிவியா எல்லை அருகே மிக நெருக்காமாக ஓடுகிறது.

பியூடோ பகியா நேக்ரா நகரிலிருந்து, பராகுவே ஆறு, அபா ஆற்றில் சங்கமிப்பதற்கு முன்பு பராகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நடுவே எல்லையாக பாய்கிறது.

சுமார் 400 கி.மீ. பராகுவே நாட்டின் நடுவே பாய்ந்து, பில்கோமாயோ ஆற்றில் சங்கமித்த பின்பு, பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியான் நகரை கடந்து, அர்சண்டினா நாட்டிற்கு எல்லையாக சுமார் 275 கி.மீ பாய்ந்து, இறுதியில் பரானா ஆற்றுடன் சேர்ந்துவிடுகிறது.

பயன்கள்

அசன்சியானில் உள்ள பராகுவே ஆற்றின் துரைமுகம்

பரானா ஆற்றுக்கு பிறகு இரியோ-டி-லா-பிளாடா படுகையில் பராகுவே ஆறு தான் பெரியது. பராகுவேயின் வடிநிலத்தில் சுமார் 365,592 சதுர கிலோமீட்டர், அர்சண்டினாவின் பெரும் பகுதி, தெற்கு பிரேசில், பொலிவியாவின் சில பகுதிகள் மற்றும் பராகுவே நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இரியோ-டி-லா-பிளாடா படுகையில் உள்ள மற்ற பெரிய ஆறுகளைப் போல் அல்லாமல், பராகுவே ஆற்றின் குறுக்கே நீர் மின் சக்திக்காக அணை கட்டப்படவில்லை, இதன் காரணமாக குறிப்பிட்ட தூரம் வரை பயணம் செய்யலாம், இக்கண்டத்திலேயே அமேசான் ஆற்றுக்கு பிறகு இதில் சிறிது தூரம் பயணிக்கலாம். இதன் மூலம் இது முக்கியமான கப்பல் மற்றும் வணிக பாதையாக இருப்பதால், பராகுவே மற்றும் பொலிவியா போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகளுக்கு மிகவும் தேவையான அட்லாண்டிக் பெருங்கடலின் இணைப்பாக இருக்கின்றது. அசன்சியான் மற்றும் கன்செப்சன் போன்ற பராகுவே நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் மற்றும் அர்சண்டினாவின் ஃபார்மோசா நகரத்திற்ககும் சேவை செய்கின்றது.

மீன் பிடித்தல் மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு பங்களிப்பதால் இந்த ஆறு வணிகத்திற்கு மூலமாகவும் இருக்கிறது. பராகுவே ஆறு, அதன் கரைகளின் வாழும் நிறைய ஏழை மீனவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதோடல்லாமல், மீன்களை சந்தையில் விற்று அவர்களின் முக்கிய வருமானமாத்திற்கும் வழிவகுக்கிறது மற்றும் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. இதனால் வறுமையில் வாடும் விவசாயிகள், எளிய வாழ்க்கை முறைக்காக அசன்சியான் போன்ற பெரும் நகரங்களில் குடிபெயர்வதால் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாகின்றது. பருவக்காலங்களில் வெள்ளம் வருவதால் கரையோரங்களில் வாழும் பல ஆயிரம் குடியிருப்பு வாசிகள் நீர் வடியும் வரை தற்காலிகமாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பராகுவே ராணுவம் அதற்கென்று தலைநகரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை வீடுகளற்ற குடிமக்களுக்கு அவசர குடியிருப்பு தேவைக்காக வலுகட்டாயமாக தர வேண்டியுள்ளது. இந்த ஆற்றின் அழகு சுற்றுலா பயணிகளை கவர்வதாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.