பரதன் (இயக்குநர்)

பரதன் (Bharathan) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்ததிலிருந்து இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இவர், 2001 இல் வெளிவந்த விக்ரமின் தில் மற்றும் தரணி இயக்கிய விஜயின் கில்லி, மதுர ஆகியவற்றுக்கும் இயக்குநர் சிவா இயக்கிய அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.[1][2] விஜயின் நடிப்பில் பரதன் முதலாவதாக இயக்கிய அழகிய தமிழ்மகன் திரைப்படம் வருவாயில் குறைந்த அளவையே பெற்றுக் கொண்டது.[3] இவரது இரண்டாம் திரைப்படமான அத்தி சராசரியான வருவாயைப் பெற்றுக்கொண்டது.[4]விஜயின் அறுபதாவது திரைப்படமான பைரவாவினை இவர் இயக்குகின்றார்.[5]

பரதன்
பிறப்புBharathan
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001 – தற்போது

திரைப்படப்பட்டியல்

ஆண்டு திரைப்படம் செயல் மொழி குறிப்பு மேற்கோள்
2001தில்எழுதுநர்தமிழ்வசனம்[6]
2001தூள்எழுதுநர்தமிழ்வசனம்
2004கில்லிஎழுதுநர்தமிழ்வசனம்[7]
2004மதுரஎழுதுநர்தமிழ்வசனம்[8]
2007அழகிய தமிழ்மகன்இயக்குநர், எழுதுநர்தமிழ்[3]
2011ஒஸ்திஎழுதுநர்தமிழ்வசனம்
2014 வீரம்எழுதுநர்தமிழ்வசனம்[9]
2014அத்திஇயக்குநர், எழுதுநர்தமிழ்

[4]

2017பைரவாஇயக்குநர், எழுதுநர்தமிழ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.