பத்ரேஸ்வரர் சமணர் கோயில்

பத்திரேஸ்வரர் சமணக் கோயில் (Bhadreshwar Jain Temple), என்றழைக்கப்படும் வசாய் சமணக் கோயில் சமணத்தின் இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதருக்கு அர்பணிக்கப்பட்ட, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.

கட்ச் பத்ரேஸ்வரர் சமணக் கோயில்
வசாய் சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பத்ரேஸ்வர், கட்ச் மாவட்டம், குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்22°54′42.1″N 69°54′14″E
சமயம்சமணம்
கட்டிடக்கலை தகவல்கள்
அளவுகள்

அமைவிடம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின், கட்ச் மாவட்டத்தின் முந்திரா வருவாய் வட்டத்தில், முந்திரா துறைமுகத்திலிருந்து 32 கிமீ தொலைவிலும், புஜ் நகரத்திற்கு தெற்கில் 75 கிமீ தொலைவிலும், மாண்டவிக்கு கிழக்கே 69 கிமீ தொலைவிலும் பத்திரேஸ்வர் சமணக் கோயில் அமைந்துள்ளது..[1][2]

வரலாறு

பண்டைய சமணக் கோயிலான இதனை அவ்வப்போது சீரமைத்தும், மறுசீரமைத்தும் கட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.[2] இக்கோயில் கிமு449ல் பத்திராவதி மன்னர் சித்தசேனர் என்பவர் சீரமைத்தார்.[3][4]பல்லாண்டுகள் கழித்து இக்கோயிலை இடித்து, கிபி 1125ல் தேவசந்திரன் என்ற சமணர் இக்கோயிலுக்கு அடித்தளமிட்டார். [5][6] 26 சனவரி,2011 குஜராத் நிலநடுக்கத்தின் போது இக்கோயில் முற்றிலும் சேதமடைந்தது.[7][8][9][10][11]

கட்டிடக் கலை

2011 நிலநடுக்கத்தில் முற்றிலும் சேதமடைந்த இக்கோயிலை, இடித்து விட்டு, இராஜஸ்தான் மாநிலத்தின் தில்வாரா கோயில் போன்ற கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. 85 அடி நீளம், 48 அடி அகலம் கொண்ட கோயிலின் மகா மண்டபத்தைச் சுற்றிலும் 24 சமணத் தீர்த்தங்கரர்கள், அருகதர்கள் மற்றும் கணாதரர்களுக்குமான 52 சன்னதிகளும், அதற்கான கோபுரங்களும் கொண்டது. கோயிலின் கருவறையில் நடுவில் அஜிதநாதர், வலப்புறத்தில் பார்சுவநாதர், இடப்புறத்தில் சாந்திநாதர் பளிங்குக் கல் உருவச் சிலைகள் உள்ளது. [6][7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.