பத்தனாபுரம்
பத்தனாபுரம் என்னும் ஊர், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. பத்து யானைகளைக் கட்டிய இடம் என்பதால் பத்தானபுரம் என்ற பெயர் பெற்று பத்தனாபுரம் என மருவியதாகக் கருதுகின்றனர். புனலூர்-பத்தனம்திட்டா-மூவாற்றுப்புழை மாநில நெடுஞ்சாலை, இந்த ஊரின் வழியாக செல்கின்றது. இங்கு நெல், மிளகு, இஞ்சி, முந்திரி, மரவள்ளி, ரப்பர் ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
இது திருவனந்தபுரத்தில் இருந்து 85 கி.மீட்டர் தொலைவிலும், கொல்லத்தில் இருந்து 43 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 89 கி.மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது.
போக்குவரத்து
- ரயில் போக்குவரத்து: ஆவணீஸ்வரம்(7 கி.மி) செங்கன்னூர்(42 கி.மி)/காயம்குளம்( கி.மி)/கொல்லம்(43 கி.மி)
- விமான போக்குவரத்து: திருவனந்தபுரம் (89 கி.மி)/ கொச்சிக்கு அடுத்துள்ள நெடும்பாசேரி (175 கி.மி)
- பேருந்துகள்: இங்கிருந்து கேரளத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் உள்ளன.
அரசியல்
பட்டணபுரம் சட்டமன்றம் மாவெலிக்கர லோக்சபா தொகுதியின் பகுதியாகும். 2014 பொதுத் தேர்தலில் கொடைண்ணில் சுரேஷ் வென்ற பாராளுமன்ற உறுப்பினர்.
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.