பட்டினப்பிரவேசம்

பட்டினப்பிரவேசம் (Pattina Pravesam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், மீரா, சிவச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலம் மீரா, டெல்லி கணேஷ், ஸ்வர்ணா, சரத் பாபு, ஜெயஸ்ரீ தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

பட்டினப்பிரவேசம்
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன்
பிரேமாலயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
டெல்லி கணேஷ்
மீரா
சரத் பாபு
சிவச்சந்திரன்
ஜெயஸ்ரீ
ஸ்வர்ணா
ஒளிப்பதிவுலோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுசெப்டம்பர் 9, 1977
நீளம்3882 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தில் விதவையான தாய், தனது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறாள். அவர்கள் அனைவரும் நகரத்தில் வாழ ஆசைப்பட்டு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருகின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரும் நகர வாழ்க்கையில் ஈடு கொடுக்க முடியாமல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் அனைவரும் கிராமத்திற்கே சென்றுவிடுகின்றனர்.[1]

நடிப்பு

டெல்லி கணேஷ் - முருகன் 
ஜெய்கணேஷ் - சரவணன்
சிவச்சந்திரன் - குமரன்
காத்தாடி ராமமூர்த்தி - வெகுளி தண்டபாணி
சரத் பாபு
மீரா[2]

தயாரிப்பு

பட்டினப் பிரவேசம் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் கைலாசம் பாலசந்தர். இது 1977இல் விசு எழுதிய மேடை நாடகத்தின் கதையாகும்.[3][4][5] பிரேமாலயா பிலிம்ஸின் ஆர். வெங்கட்ராமன் இப் படத்தை தயாரித்துள்ளார்.[3] இதில், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன், மற்றும் சரத் பாபு நடித்துள்ளனர்.[6] கணேஷ் இப் படத்தின் மூலமான நாடகத்திலும் நடித்துள்ளார்.[3] மற்றும் அதே கதா பாத்திரத்தில் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[7] காத்தாடி ராமமூர்த்தி, 'வெகுளி தண்டபாணியாக' நாடகத்திலும், அதே கதா பாத்திரத்தை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[8]

பாடல்கள்

இப் படத்திற்கு இசை அமைத்தவர் ம. சு. விசுவநாதன் மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.[9][10] இப் படதில் வரும் " வான் நிலா நிலா" என்னும் பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.[3]

எண் தலைப்புபாடியவர்கள் நீளம்
1. "அன்பு மேகமே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:08
2. "தர்மத்தின் கண்ணைக்கட்டி"  ம. சு. விசுவநாதன் 5:02
3. "தந்தானானே"  ம. சு. விசுவநாதன் 1:21
4. "வான் நிலா நிலா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:48
5. "வான் நிலா நிலா"  பி. சுசீலா 1:05
6. "வாங்கடி சிட்டுக்களா"  எல். ஆர். ஈஸ்வரி 3:25

வெளியீடு மற்றும் வரவேற்பு

பட்டினப் பிரவேசம் செப்லம்பர் 9, 1977இல் வெளியிடப்பட்டது.[11] ஆனந்த விகடன் பத்திரிகை இப்படத்திற்கு 100க்கு 52 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.[3]

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    1. Agnihotri, Ram Awatar (1991). Modern Indian Films on Rural Background: Social and Political Perspectives With Survey Study. Commonwealth Publishers. பக். 332. Archived from the original on 13 February 2018. https://web.archive.org/web/20180213053653/https://books.google.co.in/books?id=Vw9lAAAAMAAJ&q=pattina+pravesam&dq=pattina+pravesam&hl=en&sa=X&ved=0ahUKEwjI5sLGlqDZAhWH6Y8KHceKDncQ6AEIMjAD.
    2. Ramachandran, T.M. (1978). Film World. 14. Archived from the original on 13 February 2018. https://web.archive.org/web/20180213053653/https://books.google.co.in/books?id=xXhTAAAAYAAJ&q=Pattina+Pravesam&dq=Pattina+Pravesam&hl=en&sa=X&ved=0ahUKEwjn-euQkqLZAhUGv48KHVMCAoUQ6AEIJjAA.
    3. Bhatt, Karthik (12 April 2016). "Pattinapravesam : From Stage to Celluloid". மூல முகவரியிலிருந்து 26 January 2018 அன்று பரணிடப்பட்டது.
    4. "After 500 films, he's 72 and not out". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 13 August 2016. Archived from the original on 26 January 2018. http://www.newindianexpress.com/entertainment/tamil/2016/aug/13/After-500-films-hes-72-and-not-out-1508747.html.
    5. Rangarajan, Malathi (20 October 2016). "It is a ‘golden’ milestone". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/It-is-a-%E2%80%98golden%E2%80%99-milestone/article16076731.ece.
    6. Mohan V. Raman (3 January 2015). "KB: Kollywood’s Discovery Channel". தி இந்து. Archived from the original on 1 May 2015. http://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece.
    7. Rao, Subha J. (6 July 2010). "When simplicity took centrestage". The Hindu. Archived from the original on 13 February 2018. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/When-simplicity-took-centrestage/article16188051.ece.
    8. Prabhu, S. (27 March 2014). "Soaring kite". The Hindu. Archived from the original on 13 February 2018. http://www.thehindu.com/features/friday-review/theatre/soaring-kite/article5839127.ece.
    9. Viswanathan, M. S.. "Pattina Pravesam (1977)". மூல முகவரியிலிருந்து 13 February 2018 அன்று பரணிடப்பட்டது.
    10. "Pattina Pravesam". மூல முகவரியிலிருந்து 24 April 2018 அன்று பரணிடப்பட்டது.
    11. "பட்டிணப்பிரவேசம்" (Tamil). மூல முகவரியிலிருந்து 12 February 2018 அன்று பரணிடப்பட்டது.

    வெளி இணைப்புகள்



    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.