ப. தங்கம்

ப. தங்கம் (P.Thangam, பிறப்பு: சூன் 15, 1937), தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் வாழும் ஓவியர் ஆவார். இவரது மனைவி சந்திரோதயம் ஒரு ஓவியரும் ஓவிய ஆசிரியருமாவார். சித்திரக்கதைகளில் நாட்டம் மிகுந்தவர். இவரது ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றனவாகும்.

பிறப்புப.தங்கம்
கும்பகோணம், இந்தியா
தேசியம்இந்தியன்
உறவினர்கள்மனைவி சந்திரோதயம் மகள் பொன்னியின் செல்வி,மகன் ராஜேந்திரன்

கல்வி, பணி

கும்பகோணம் ஓவியப்பள்ளியில் (தற்போது கல்லூரி) 1950ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் ஓவியம் பயின்று, சென்னையில் தினத்தந்தி இதழில் ஓவியராக 1958ஆம் ஆண்டு முதல் மூன்று காலம் பணியாற்றி, மதுரை மாவட்டத்தில் நாகமலை, தே.கல்லுபட்டி, திருமங்கலம், திருச்சி அருகே திருவெறும்பூர் ஆகிய ஊர்களில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு பின்னர் 1963ஆம் ஆண்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஓவியர், புகைப்படக்கலைஞராக 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

சித்திரக்கதை

சென்னையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழ் வசந்தம் வார மலரில் ‘வீர சோழன்‘ என்ற தலைப்பில் ஏழு ஆண்டுகள் மாமன்னன் ராஜராஜசோழனின் வீர வரலாற்றினை வரைந்து சித்திரக்கதையாக வெளியிட்டார். அம்மன்னனைப் பற்றிய சித்திரக்கதைகளை தமிழகக் குழந்தைகளுக்குத் தருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டு இதழ்களில் புகைப்படங்கள்

மருத்துவக் கல்லூரியில் இவர் ஓவியராகவும் புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றியபோது மருத்துவத்துறைக்காக நுண்நோக்கியில் எடுத்த இவருடைய புகைப்படங்கள் வெளியான வெளிநாட்டு நூல் மற்றும் இதழ்கள்.

  • இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்‘ என்ற நூல்.
  • அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘கேன்சர்‘ என்ற மருத்துவ இதழ் (1978).

நூல்கள்

  • ஓவியனின் கதை (தன் வரலாறு), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (டிசம்பர் 2010) [1]
  • அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை (ஒரு தமிழ் ஓவியனின் அமெரிக்க பயணக்கதை), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (டிசம்பர் 2003) [2]
  • இராஜகம்பீரன் (வரலாற்று சித்திரக்கதை), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (மார்ச் 2008) [3]
  • கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (சூலை 2016)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (டிசம்பர் 2016)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (மூன்றாம் பகுதி), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (செப்டம்பர் 2017)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம் பகுதி), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (மார்ச் 2018)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (ஐந்தாம் பகுதி), தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், தஞ்சாவூர் (சூலை 2018)

ஓவியங்கள்

இவர், தனது மனைவியுடன் வரைந்த ஓவியங்கள் மிகச் சிறந்த கலைப்படைப்புகள் ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கன பின்வருவனவாகும்.

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.