நைட்ரோனியம் பெர்குளோரேட்டு
நைட்ரோனியம் பெர்குளோரேட்டு (Nitronium perchlorate) என்பது NO2ClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் நைட்ரைல் பெர்குளோரேட்டு மற்றும் நைட்ராக்சில் பெர்குளோரேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பெர்குளோரேட்டு எதிர்மின் அயனிகளும் நைட்ரோனியம் நேர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. நிறமற்ற ஒற்றைச்சரிவு படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீருறிஞ்சும் தன்மையுடன் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் நைட்ரோயேற்ற முகவராகவும் செயல்படுகிறது. கரிமச் சேர்மங்களுடன் தொடர்பு கொண்டவுடன் இது உடன் தீப்பற்றும் தன்மையைப் பெறுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
நைட்ரோனியம் பெர்குளோரேட்டு, நைட்ராக்சில் பெர்குளோரேட்டு, நைட்ரைல் பெர்குளோரேட்டு | |||
இனங்காட்டிகள் | |||
17495-81-7 ![]() | |||
பண்புகள் | |||
NO6Cl | |||
வாய்ப்பாட்டு எடை | 161.45 | ||
உருகுநிலை | |||
கொதிநிலை | சிதைவடையும் | ||
கரையும், நீருறிஞ்சும் | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | நைட்ரோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் பெர்குளோரேட்டு நைட்ரோசில் பெர்குளோரேட்டு சோடியம் பெர்குளோரேட்டு பொட்டாசியம் பெர்குளோரேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
திட ஏவூர்தி எரிபொருளாகப் பயன்படுத்த நைட்ரோனியம் பெர்குளோரேட்டு ஆய்வு செய்யப்படுகிறது. 1963 ஆம் ஆண்டில் தாமசு என். கிகார்சியா இவ்வெரிபொருளுக்கான காப்புரிமைக்காக முயற்சித்தார் [1]. இருப்பினும் இச்சேர்மத்தின் வினைத்திறனும் பல பொருள்களுடன் பொருந்தாத தன்மையும் இப்பயன்பாட்டிற்கு தடையாக உள்ளன. உலர் அமோனியா வாயுவைச் செலுத்தி தளத்தில் தயாரிக்கப்படும் அமோனியம் நைட்ரேட்டு மீது நைட்ரோனியம் பெர்குளோரேட்டை மேற்பூச்சாகப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு பின்னர் காப்புரிமை வழங்கப்பட்டது [2].
பல்லிணைதிறன் நேர்மின் அயனிகளுடன் ஒரு மாசுவாக சேர்ப்பதன்மூலம் நைட்ரோனியம் பெர்குளோரேட்டின் சிதைவு வீதத்தை மாற்ற இயலும் [3].
நைட்ரோனியம் பெர்குளோரேட் மற்றும் அம்மோனியம் பெர்குளோரேட்டு ஆகியவை விகிதவியல் அளவுகளில் உலோகமல்லாத எரிபொருட்களுடன் எரிக்கப்பட்டால் அவை புகையை வெளியிடுவதில்லை. பொட்டாசியம் பெர்குளோரேட்டு மற்றும் பிற உலோக குளோரேட்டுகள் திண்மப் பொருட்களாக இருப்பதால் அவற்றின் துகள்களில் புகைப்படலத்தை உருவாக்குகின்றன. அனைத்து வகையான பெர்குளோரேட்டுககைக் காட்டிலும் நைட்ரோனியம் பெர்குளோரேட்டானது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். இதை எளிதாக வெடிக்கச் செய்யவும் முடியும் [4].
மேற்கோள்கள்
- Thomas N. Scortia. NITRONIUM PERCHLORATE PROPELLANT COMPOSITION, USPTO patent number 3575744, filed Mar 27, 1963; issued Apr 20, 1971; assignee: United Aircraft 5 Corporation.
- Diebold, James P. (17 April 1973). Encapsulation of Nitronium Perchlorate Employing Ammonia to Form Ammonium Perchlorate. (Patent) Department of the Navy, Washington DC. Accession Number: AD0164909.
- NITRANIUM PERCHLORATE REACTION RATE ALTERATION. USPTO patent number 3770527.
- Thiokol Propulsion: Rockets Basics - A Guide to Solid Propellant Rocketry. Checked 2009-06-18.