நுனி முடிச்சு
நுனி முடிச்சு என்பது மிக அடிப்படையான எளிய ஒரு முடிச்சு. ஒரு கண்ணி (வளையம்) போல் செய்து உள்ளே நுழைத்து வெளியே இழுத்தால் இம்முடிச்சு உருவாகும். இம் முடிச்சு எளிய சுருக்கு முடிச்சு, தூண்டிலர் தடம், விரல்சுழற்றுத் தடம், மீனவர் முடிச்சு, நாடா முடிச்சு போன்ற பல முடிச்சுகளுக்கு அடிப்படையானது. இம்முடிச்சு பாதுகாப்பானது ஆனால் சிக்கும். அவிழ்க்காமல் நிலையாக இருக்கும் முடிப்பானால் இது நல்ல முடிச்சு. ஒரு கயிற்றின் நுனி நழுவிவிடாமல் இருக்க இம் முடிச்சு நுனியில் பரவலாக இடப்படும்.
நுனி முடிச்சு | |
---|---|
![]() இரண்டு நுனிமுடிச்சுகள். இவற்றுள் ஒன்று நுனி நழுவிசெல்லாமல் தடுக்கும் முடிச்சு. | |
வகை | தடுப்பி |
செயற்றிறன் | 50% |
மூலம் | பழங்காலம் |
தொடர்பு | Simple noose, Overhand loop, எட்டு வடிவ முடிச்சு, Angler's loop, Fisherman's knot, Water knot |
அவிழ்ப்பு | Extreme jamming |
பொதுப் பயன்பாடு | மீன்பிடித்தல், ஏறுதல், காலணி பூட்டுமுடி, மற்ற முடிச்சுகள் இட. |
எச்சரிக்கை | நிலை முனையை தவறான திசையில் விசையுடன் இழுத்தால் முடிச்சு நழுவிவிடும். |
Conway Notation | 3 |
A/B notation | 31 |
முடிச்சிடுதல்
இம்முடிச்சைப் பலவாறு இடலாம்.
- கட்டைவிரலைச் சுற்றி கயிற்றை வளைத்து நுனியை (செயல்முனையை) கட்டைவிரலால் கண்ணிக்குள் (வளையத்துக்குள்) தள்ளி வெளியே இழுக்க வேண்டும். இதனால் இம் முடிச்சுக்கு கட்டைவிரல் முடிச்சு (Thumb knot) என்றும் பெயர்.
- ஒரு கயிற்றை வளைத்து வைத்துக் கொண்டு கையில் பிடித்து மணிக்கட்டில் மேலே சுழற்றி கையை வளையத்துக்குள் நுழைத்து நுனியை (செயல்முனையை) விரலில் பிடித்து வளையம் வழி இழுக்கவும்.
முடிச்சியல்
கணித முடிச்சியலில் இதற்கு இணையான வடிவம் மூவிலை (கணித) முடிச்சு.
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.