நிலக்கடலை

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் (peanut) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

நிலக் கடலை
(Arachis hypogaea)
வேர்க்கடலை (நிலக் கடலை)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: திசுவுடைத் தாவரங்கள்
வகுப்பு: மாக்னோலிஃபைடா
வரிசை: ஃபேபேலிஸ்
குடும்பம்: பூக்கும் தாவரம்
துணைக்குடும்பம்: ஃபேபுய்டியா
சிற்றினம்: அஸ்கினோமேனானியே
பேரினம்: அராக்கிஸ்
இனம்: ஹைபோஜியா
இருசொற் பெயரீடு
அராக்கிஸ் ஹைபோஜியா லி
கரோலஸ் லின்னேயஸ்

இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

நோய்கள்

பூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன[1].


பயன்கள்

நிலக்கடலை, valencia, raw
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 570 kcal   2390 kJ
மாப்பொருள்     21 g
- சர்க்கரை  0.0 g
- நார்ப்பொருள் (உணவு)  9 g  
கொழுப்பு48 g
- நிறைவுற்ற கொழுப்பு  7 g
- ஒற்றைநிறைவுறா கொழுப்பு  24 g  
- பல்நிறைவுறா கொழுப்பு  16 g  
புரதம் 25 g
நீர்4.26 g
தயமின்  0.6 mg  46%
ரிபோஃபிளாவின்  0.3 mg  20%
நியாசின்  12.9 mg  86%
பான்டோதெனிக் அமிலம்  1.8 mg 36%
உயிர்ச்சத்து பி6  0.3 mg23%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  246 μg 62%
உயிர்ச்சத்து சி  0.0 mg0%
உயிர்ச்சத்து ஈ  6.6 mg44%
கால்சியம்  62 mg6%
இரும்பு  2 mg16%
மக்னீசியம்  184 mg50% 
பாசுபரசு  336 mg48%
பொட்டாசியம்  332 mg  7%
துத்தநாகம்  3.3 mg33%
Link to full USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .

நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.