நான்சி சண்டை

நான்சி சண்டை (Battle of Nancy) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப்படைகள் பிரான்சின் நான்சி நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற்றின.

நான்சி சண்டை
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி
நாள் செப்டம்பர் 5 – 15, 1944
இடம் 48°41′36″N 06°11′04″E
லொரைன், பிரான்சு
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  நாட்சி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
மாண்டன் எஸ். எட்டி ஹைன்ரிக் வான் லியூட்விட்ஸ்
பலம்
3 டிவிசன்கள் 2 டிவிசன்களும் 2 ரெஜிமண்ட்டுகளும்
இழப்புகள்
குறைந்த பட்சம் 2,851 குறைந்த பட்சம் 4,081

ஆகஸ்ட் 1944ல் பாரிஸ் நகரம் மீட்கப்பட்டவுடன் நேசநாடுகளின் மேற்கு ஐரோப்பியப் படையெடுப்பின் முதல் கட்டம் முடிவடைந்தது. அடுத்த கட்டமாக ரைன் ஆற்றங்கரைக்கு முன்னேற அவை திட்டமிட்டன. நான்சி என்பது வட கிழக்கு பிரான்சில் மோசெல் ஆற்றருகே அமைந்துள்ள நகரம். செப்டம்பர் 5 ம் தேதி ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் தலைமையிலான அமெரிக்க 3வது ஆர்மி அந்நகரைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடங்கியது. 3வது ஆர்மியின் உட்பிரிவான 12வது கோரிடம் நான்சியைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இக்கோரில் இரண்டு காலாட்படை டிவிசன்களும் ஒரு கவச டிவிசனும் இருந்தன. நான்சி நகரை 47வத் ஜெர்மானிய பான்சர் (கவச) கோர் பாதுகாத்து வந்தது.

நான்சி நகரை அடைய மோசெல் ஆற்றைக் கடக்க வேண்டும். முதல் இரு நாட்களில் ஆற்றைக் கடக்க அமெரிக்க 80வது காலாட்படை டிவிசன் மேற்கொண்ட முயற்சிகளை ஜெர்மானியப் படைகள் முறியடித்து விட்டன. அடுத்த சில நாட்களுக்கு மெதுவாக ஆயத்தங்கள் செய்த அமெரிக்கப் படையினர் செப்டம்பர் 10ம் தேதி மீண்டும் ஆற்றைக் கடக்க முயன்று அதில் வெற்றி கண்டனர். மோசெல் ஆற்றை பல இடங்களில் கடந்து பாலமுகப்புகளை (bridgehead) ஏற்படுத்தினர். அவற்றின் வழியே பிற அமெரிக்கப் படைப்பிரிவுகள் முன்னேறி செப்டம்பர் 13ம் தேதி நான்சி நகரை சுற்றி வளைத்தன. அமெரிக்கப் படைகளின் ஒருமையத் சுற்றி வளைப்புத் (concentric encirclement) தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் செப்டம்பர் 15ம் தேதி ஜெர்மானியப் படைகள் நகரை விட்டு வெளியேறிப் பின்வாங்கின. கைப்பற்றப்பட்ட நான்சி நகரம் பின்னால் நேசநாட்டுப் படைகளுக்குப் பிரான்சில் ஒரு முக்கிய தொலைத்தொடர்பு மையமாகப் பயன்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.