நாசா வேல்ட் வின்ட்
வேல்ட் விண்ட் மென்பொருளானது நாசா, திறந்த நிரலாக்க குழுக்களாலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயன்குதளத்திற்கென உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இம்மென்பொருளில் பொதுவில் கிடைக்கும் பல்வேறு லேயர்கள் (Layers) பயன்படுத்தப்படுகின்றது. இவற்றுள் செய்மதியூடான படங்கள், வானில் இருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் பாவிக்கும் வசதியுள்ளது.
நாசா வேல்ட் விண்ட் | |
---|---|
![]() நீல மாபிள் லேயரைக் காட்ட்டும் வேல்ட் விண்ட் திரைக்காட்சி | |
உருவாக்குனர் | நாசா அமெஸ் ஆய்வு நிலையம் (NASA Ames Research Center) |
துவக்க வெளியீடு | 2004 |
பிந்தைய பதிப்பு | 1.4 / பெப்ரவரி 14, 2007 |
நிரலாக்க மொழி | C# |
இயக்குதளம் | Windows 2000, XP |
மொழிகள் | ஆங்கிலம் |
வகை | மாய உலகம் |
அனுமதி | நாசா திறந்த மூலம் அனுமதி 1.3 |
இணையத்தளம் | worldwind.arc.nasa.gov |
மேலோட்டம்
வேல்ட் விண்ட் மென்பொருளானது ஆரம்பத்தில் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிந்தைய பதிப்பான 1.4 ஆனது வேல்ட் விண்ட் செண்டரல்/பிறீ ஏத் பவுண்டேசன்ன் (WorldWind Central/Free Earth Foundation) ஊடாகப் பெரும்பாலும் திறந்த நிரலாக்க குழுக்களூடாகவே பெரிதும் முன்னெடுக்கப்பட்டது.
வேல்ட் விண்ட் மென்பொருளில் பூமியை விட சந்திரன் உபகோளையும் செவ்வாய், வீனஸ், யூப்பிட்டர் போன்ற கிரகங்களையும் பார்க்க இயலும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.