நல்ல தங்கை

நல்ல தங்கை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நல்ல தங்கை
இயக்கம்எஸ். ஏ. நடராஜன்
தயாரிப்புஎஸ். ஏ. நடராஜன்
பார்வாத் ஆர்ட் பிலிம்ஸ்
கதைஏ. பி. நாகராஜன்
இசைஜி. ராமனாதன்
நடிப்புஎம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
டி. எஸ். பாலையா
ஏ. கருணாநிதி
எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
ராஜசுலோச்சனா
மாதுரி தேவி
டி. ஆர். ராஜகுமாரி
எம். எஸ். எஸ். பாக்கியம்
வெளியீடுபெப்ரவரி 5, 1955 [1]
ஓட்டம்.
நீளம்16099 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்று திரைப் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், ஆர். லட்சுமண தாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர். பி. லீலா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. வி. ரத்தினம், (ராதா) ஜெயலட்சுமி, ஜி. இராமநாதன், திருச்சி லோகநாதன், டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பின்னணி பாடினர்.[3]

எண்.பாடல்பாடியவர்/கள்பாடலாசிரியர்கால அளவு
1என்னைப் போலே பாக்யசாலிஜிக்கி & பி. லீலாகா. மு. ஷெரிப்
2தேனே பாகே தெவிட்டாத(ராதா) ஜெயலட்சுமி
3மாப்பிள்ளே மக்கு மாப்பிள்ளேபி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலாஅ. மருதகாசி
4ஏ, பி, சி, டி படிக்கிறேன்திருச்சி லோகநாதன் & சீர்காழி கோவிந்தராஜன்
5அறிவுள்ள அழகன்திருச்சி லோகநாதன் & ஜிக்கி03:15
6ஓ சீமானே திரும்பிப் பாரும்டி. வி. ரத்தினம்
7கல கல வென சாலையில்குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன்கே. பி. காமாட்சிசுந்தரம்
8துயில் நீங்கி எழுந்திடுவாய்டி. எம். சௌந்தரராஜன்ஆர். லட்சுமண தாஸ்03:14
9கூலி மிகக் கேட்பார் ... எங்கிருந்தோ வந்தான்ஜி. இராமநாதன்சுப்பிரமணிய பாரதியார்06:18

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails20.asp.
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 621. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 94.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.