ராஜசுலோசனா

ராஜசுலோசனா (Rajasulochana, தெலுங்கு: రాజసులోచన, ஆகத்து 15, 1935 - மார்ச் 5, 2013, அகவை 77) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை. 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

ராஜசுலோசனா
பிறப்புபிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு ராஜசுலோசனா
ஆகத்து 15, 1935(1935-08-15)
விசயவாடா, சென்னை மாகாணம்
இறப்புமார்ச்சு 5, 2013(2013-03-05) (அகவை 77)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1950கள்- 1970கள்
வாழ்க்கைத்
துணை
சி. எஸ். ராவ்

வாழ்க்கைக் குறிப்பு

ராஜசுலோசனா 1935 ஆம் ஆண்டில் சித்தூரில் பிறந்தார். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை மணந்தார். 17 வயதில் நடிக்க வந்த இவர் 1953-ல் குணசாகரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பின்னாளில் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார். பின்னர் மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் "புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்" என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

திரையுலகப் பங்களிப்புகள்

கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் திரைப்படங்களில் நடித்தார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. பெண்ணரசி
  2. ரங்கூன் ராதா
  3. அம்பிகாபதி
  4. அரசிளங்குமரி
  5. படித்தால் மட்டும் போதுமா
  6. வணங்காமுடி
  7. எங்க வீட்டு வேலன்

மறைவு

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜசுலோசனா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு 2013 மார்ச் 5 காலையில் தனது 77வது அகவையில் காலமானார். இவருக்கு ஷியாம் சுந்தர், ஸ்ரீ, தேவி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் ராவ் காலமானார்.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.