அத்தடு

அத்தடு (தெலுங்கு:అతడు), 2005ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இது நந்து என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே ஆண்டில் வெளிவந்தது.

அத்தடு
DVD உறை
இயக்கம்த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
தயாரிப்புJayabheri Kishore
M ராம்மோகன்
கதைத்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
இசைமணி ஷர்மா
நடிப்புமகேஷ் பாபு
த்ரிஷா
பிரகாஷ் ராஜ்
சோனு சூத்
சாயாஜி ஷிண்டே,
பிரம்மானந்தம்
விநியோகம்Sri Jayabheri Art Productions
வெளியீடுஆகஸ்டு 10, 2005 (இந்தியா)
ஓட்டம்172 நி.
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நந்து (மகேஷ் பாபு), மல்லியுடன் (சோனு சூத்) இணைந்து பணத்திற்காக கொலை செய்யும் தொழில்முறை கொலைகாரனாவான். ஒரு முறை, கட்சித் தலைவர் சிவா ரெட்டியை (சாயாஜி ஷிண்டே) கொல்லும் முயற்சியில் காவல்துறையினரிடம் இருந்து தப்புகிறான். அந்தக் கொலையை அவன் செய்யாதபோதும் அக்கொலைப்பழி நந்து மேல் விழுகிறது. தப்பியோடும் வழியில் அவனை அறியாமல் பார்துவின் (ராஜிவ்) சாவுக்கு காரணமாகிறான். பார்து 12 ஆண்டுகள் கழித்து தன் ஊருக்குத் திரும்பி வரும் ஓர் இளைஞனாவான். எனவே, பார்துவின் பெயரில் அவனுடைய கிராமத்துக்கு வீட்டுக்குச் செல்கிறான் நந்து. அங்கு பார்துவின் முறைப்பெண் பூரி (த்ரிஷா) மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் மனங்கவர்ந்தவனாகிறான். உண்மையில் அக்கொலையைச் செய்தது யார், நந்து யார் என்பதை பார்துவின் குடும்பத்தினர் அறிந்தனரா என்பது பட முடிவில் தெரிகிறது.

நடிப்பு

திரைப்படக் குழு

  • திரைக்கதை: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
  • வசனம்: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
  • ஒளிப்பதிவு: கே. வி. குகன்
  • சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெய்ன்ஸ்
  • நடனம்: வைபவ் மெர்ச்சண்ட், ராஜூ சுந்தரம், & ப்ருந்தா
  • படத்தொகுப்பு: ஏ. ஸ்ரீகர்பிரசாத்
  • கலை: தோட்டாதரணி

வணிக வெற்றி

  • 23 கோடி இந்திய ரூபாய் வசூல்.
  • 204 திரையரங்குகளில் 50 நாட்கள்
  • 24 திரையரங்குகளில் 100 நாட்கள்.
  • 4 திரையரங்குகளில் 175 நாட்கள்

துணுக்குகள்

  • இப்படத்தை எடுக்க ஓர் ஆண்டுக்கும் மேலானது.
  • பட இறுதிச் சண்டையை படம்பிடிக்க 27 நாட்கள் ஆனது.
  • இத்திரைப்படம் இந்தியில் பாபி தியோல், நானா படேகரை கொண்டு எடுக்கப்பட இருக்கிறது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.