நதியெஸ்தா குரூப்ஸ்கயா

நதியெஸ்தா கான்ஸ்தன்தீனவ்னா நாதியா குரூப்ஸ்கயா (Nadezhda Konstantinovna "Nadya" Krupskaya, உருசியம்: Наде́жда Константи́новна Кру́пская, 26 பெப்ரவரி [யூ.நா. 14 பெப்ரவரி] 1869 – 27 பெப்ரவரி 1939)[1] உருசியப் புரட்சியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் சோவியத் ஒன்றியத்தில் 1929 முதல் 1939 இல் இறக்கும் வரை துணைக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். உருசியப் புரட்சியாளர் விளாதிமிர் லெனின்ன் இன் மனைவி ஆவார்.

நாதியா குரூப்ஸ்கயா
Nadezhda Krupskaya
நதியெஸ்தா குரூப்ஸ்யா, 1890களில்
பிறப்புநதியெஸ்தா கான்ஸ்தன்தீனவ்னா குரூப்ஸ்கயா
பெப்ரவரி 26, 1869(1869-02-26)
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
இறப்பு27 பெப்ரவரி 1939(1939-02-27) (அகவை 70)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
வாழ்க்கைத்
துணை
விளாதிமிர் லெனின் (தி. 1898-1924)

ஆரம்ப கால வாழ்க்கை

அவர் உயர் குடும்ப வகுப்புபில் பிறந்தார், ஆனால் குடும்பம் வறுமையில் வாடியது. குரூப்ஸ்காயாவின் தந்தை கான்ஸ்டான்டின் ஒரு ரஷிய இராணுவ அதிகாரி. அவர் நாட்டிற்கு எதிரான தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றக்கொள்ளபட்டது. அவர் தொழிற்சாலைகளில் வேலை செய்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இறந்தார். பின் அவரது தாயார் வேலைக்கு சென்று குரூப்ஸ்காயாவைக் காப்பாற்றினார். குரூப்ஸ்காயா இளம் வயதிலே கல்வித் துறையில் நுழைந்தார். இவர் கல்வி மீதான டால்ஸ்டாயின் கோட்பாடுகளால், ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சி கவனம் மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டுள்ளது என்பதை முன்மொழிந்தார்.

திருமண வாழ்க்கை

குரூப்ஸ்காயா முதலில் லெனினுடன் கலந்துரையாடல் ஏற்பட்டது. பின் லெனின்யின் ஆளுமை, பேச்சுக்கள் மூலம் ஈர்க்கப்பட்டார். 1896 அக்டோபரில், லெனின் கைது செய்யப்பட்டார் . பல மாதங்களுக்கு பிறகு, குரூப்ஸ்காயா கைது செய்யப்பட்டார். சில நாட்களுகள் கழித்து, சைபீரியாவில் லெனினுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. லெனின், அவரது தாயாரிடம் ஒரு "இரகசிய குறிப்பு" எழுதினார். அதில் "with him even such a job as translation was a labour of love" குறிப்பிடப்பட்டிருந்தது லெனின், திருமண உறவைவிட மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்தார் என்றும் இதை புரட்சியின் உச்சம் என்றும் குரூப்ஸ்காயா கருதினார்.

அரசியல்

அவர் 1905 ஆம் ஆண்டு மத்திய குழுவின் செயலாளராகவும்,1903 இருந்து ரஷியன் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் போல்ஷிவிக் பிரிவின் காரியாளராக இருந்தார். 1917 அக்டோபர் புரட்சியின் பிறகு, அவர் வயது வந்தோர் கல்வி பிரிவுக்கு பொறுப்பாக எடுத்துக்கொண்டார். 1920ல் கல்வி, குழுவின் தலைவர் மற்றும் 1929 முதல் 1939 வரை அரசாங்க அமைச்சர் பதவி வகித்தார். குரூப்ஸ்காயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக்களுக்குக் கல்வி போதித்தார். புரட்சிக்கு பின் காம்சோல் என்ற அழைக்கப்பட்ட பொது உடமை இளைஞர் சங்கத்தையும், இளம் தன்னார்வத் தொண்டர் படையினையும் கட்டி எழுப்பியவர்.

சோவியத் கல்வி மற்றும் நூலகங்கள்

Nadezhda Krupskaya

1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள்,ஆற்றிய சொற்பொழிவுகள், ஆகியவற்றைக் கொண்டது ‘கம்முனிச முறையில் இளைஞர்களைப் பயிற்றி வளர்த்தல்” என்ற நூல். பொதுக்கல்வியைப் பற்றி இவர் பெண் குழந்தைகலின் கல்வி, குழந்தைகளைப் பன்முகத் தன்மையுடன் வளர்த்தல், சமுக உடைமைமுறை உருவாக்கத்தில் அவசியத்தை இந் நூல் உருவாக்கியது.

புத்தகங்கள்

புரட்சிக்குப் பிந்தைய சோவித் ஒன்றியம் குறித்தக் கற்க விரும்பும் வாசகர் மாவோவின் “ரகசியப்போருளாதாரம் பற்றிய விமர்சனம்”, ஜார்ஜ் தொம்சனின் ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலின் முதல் சோசிலிச அரசு என்று ஏழாவது இயலில் ‘சோசியலிச சமுகத்தில் வர்க்கப் போராட்டம் ’ என்னும் பகுதி , பால்சுவிசியின் ‘’புரட்சிக்கு பிந்தைய சமுதாயம்’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மரியாதை

  • 1939 ல் அவரது மரணத்தைத் தொடர்ந்து லெனின்கிராட் சாக்லேட் தொழிற்சாலை அவரது நினைவாக குரூப்ஸ்காயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • திரைப்பட இயக்குனர் மார்க் டான்ச்காய் 1974 இல் தனது ஒரு வரலாற்று படம்: நாடெழ்த செய்யப்பட்டது.
  • 1974 இல் அவரது வாழ்க்கை: எழுத்தாளர், ஜேன் பார்ன்ஸ் கேசி, ஒரு கற்பனை வரலாற்று குறிப்புகள், " "I, Krupskaya: My Life with Lenin" என்ற நூலை எழுதினார்.

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. McNeal, 13.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.