நச்சுநிரல் தடுப்பி
ஆண்டிவரைஸ் (இலங்கை வழக்கு: அன்ரிவைரஸ்) பொதுவாக அறியப்படும் நச்சுநிரல் தடுப்பி (வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்) கணினி நச்சுநிரல் (கணினி வைரஸ்) மற்றும் ஏனைய கெட்ட மென்பொருட்களைக் கண்டறிந்து அகற்றும் மென்பொருளாகும்.
நச்சுநிரல்தடுப்பிகள் பொதுவாக இரண்டு முக்கியமான நடைமுறைகளைக் கையாள்கின்றன.
- கோப்புக்களை அலசி ஆராய்ந்து அதை நச்சுநிரல் அகராதியுடன் ஒப்பிட்டு ஏதேனும் பொருத்தமுள்ளதா என்பதைக் கண்டுபிடித்தல்
- மென்பொருள் அல்லது நிரலொன்றின் நடத்தைகளை அவதானித்து சந்தேகத்திற்கிடமான மென்பொருள் அல்லது நிரல்களைக் கண்டுபிடித்தல்.
பெரும்பாலான நச்சுநிரல்தடுப்பிகள இன்று இவ்விரண்டு யுக்திகளையும் கையாள்கின்றன.
ஒன்றிற்கு மேற்பட்ட நச்சுநிரற்தடுப்பி்
ஓர் கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட நச்சுநிரற்தடுப்பிகளை நிறுவவேண்டாம் இதனால் இரட்டைப் பாதுகாப்பு எதுவும் கிடையாது மாறாக கணினியின் வேகம் வெகுவாகக் குறைவடையும். அநேகமாக மக் அபீ நோர்ட்டன் பொன்றவை நிறுவாது எனினும் வேறுசில நச்சிநிரற்தடுப்பிகளை நிறுவக் கூடியதாகவுள்ளது. சிலசமயங்களில் இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்டட வைரஸ் எதிர்ப்பு நிரல்கள் நிறுவப்பட்ட கணினியில் வேகக் குறைவினால் கணினியின் இயங்குதளத்தை மீள் நிறுவவேண்டியும் ஏற்படலாம்.
வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்
நீங்கள் எந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தி வரவேண்டும் அத்துடன் கிழமைக்கு ஒரு தரமேனும் உங்கள் கணினி நச்சுநிரல்கள் அற்றது என்பதை உறுதிசெய்ய Scan செய்து வரவும்
இலவசமாகக் கிடைப்பவை
- அவாஸ்ட்!
- ஏவிஜி ஆண்டிவைரஸ்
- அன்ரிவிர்
- கிளாம்வின்
- நோர்ட்டன் செக்கியூரிட்டி ஸ்கான்
வர்த்தக ரீதியானவை
- சைமண்டெக் ஆண்டிவைரஸ்
- சைமண்டெக் கோப்பறேட் எடிசன் (அலுவலங்களுக்குரியது)
- நோர்ட்டன் ஆண்டிவைரஸ் (வீட்டுக் கணினிக்களுக்கானது)
- காஸ்பேக்ஸி
- மாக் கா fஈ
- டொக்டர் சொல்மன்