நோர்ட்டன் ஆண்டிவைரஸ்

சைமண்டெக் காப்ரேஷனின் தயாரிப்பான நோர்ட்டன் ஆண்டிவைரஸ் அல்லது நார்ட்டன் ஆண்டிவரைஸ் என்றழைக்கப்படும் நச்சுநிரல் தடுப்பி (ஆண்டிவைரஸ்) உலகில் பெருமளவில் பாவிக்கப்படும் நசசுநிரலெதிரிகளில் மென்பொருட்களில் ஒன்றாகும். நோர்ட்டான் அன்ரிவைரஸ் தனியாகவும் நோர்ட்டன் இண்டநெட் செக்கியூரிட்டி மற்றும் நோர்ட்டன் சிஸ்டம் வேர்க்ஸ் (நார்ட்டன் சிஸ்டம் ஓர்க்ஸ்) உடன் சேர்த்தும் விநியோகிக்கப்படுகின்றது. இது தவிர பெரிய வலையமைப்புக்களை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட நோர்ட்டன் காப்ரேட் எடிசன் மென்பொருளும் அடங்கும். இந்தக் காப்பரெட் எடிசன் மென்பொருள் தனியாகவும் நிறுவிக்கொள்ளலாம். நோர்ட்டான் நச்சுநிரற் தடுப்பி மென்பொருட்களுள் இலவசமாகக் கிடைக்கும் நோர்ட்டன் செக்கியூரிட்டி ஸ்கான் தவிர எல்லாம் நிகழ்நிலையில் நச்சுநிரல்களைத் தடுக்கும் வசதி வாய்ந்ததாகும்.

நோர்ட்டன் ஆண்டிவைரஸ்

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் நோர்ட்டன் அன்ரிவைரஸ் 2008
உருவாக்குனர் சைமண்டெக் காப்ரேஷன்
பிந்தைய பதிப்பு 2008 அல்லது 15.0.0.58 (விண்டோஸ் பதிப்பு), 10.2 (காப்பரேட் பதிப்பு), 10.0 (ஆப்பிள் மாக் பதிப்பு) / ஆகஸ்ட் 29, 2007
இயக்குதளம் மைக்ரோசாப்ட் வின்டோஸ், Mac OS X
வகை அன்ரிவைரஸ்
அனுமதி மூடியநிலை
இணையத்தளம் Symantec.com

வரலாறு

1990 இல் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நோர்ட்டன் அன்ரிவைரஸ் மென்பொருட்களை அதிகாரப்பூர்வமாகப் பாவித்துள்ளனர். 1994 இல் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்துடன் விநியோகிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய சென்டரல் பாயிண்ட் சாப்ட்வேரை உள்வாங்கிக் கொண்டது.

நோர்ட்டன் ஆண்டிவைரஸ் 2008

குறிப்பு நோர்ட்டான் ஆண்டிவைரஸ் 2008 மற்றும் நோர்ட்டான் இண்டநெட் செக்கியூரிட்டி ஆகியவற்றில் வைரஸ் மேம்படுத்தல்கள் இதன் முன்னைய பதிப்புகளிலும் வேறானவை. [1]

வைரஸ் வரைவிலக்கணம்

சைமண்டெக்கின் நிகழ்நிலை மேம்படுத்தல் (லைவ் அப்டேட்) ஊடாக சைமண்டெக் வைரஸ் வரைவிலக்கணங்கள் மேம்படுத்தப்படும். 2 அக்டோபர் 2007 வரை 73, 701 வைரஸ்கள் அறியப்படுகின்றது. இவ்வாறாக இணையமூடாக மேம்படுத்தல்களைப் பெறுவதற்கு உரிய அங்கத்துவம் இருத்தல் வேண்டும் பொதுவாக ஒருவருடத்திற்கும் கணினித் தயாரிப்பாளர்களூடாக விநியோகிக்கப்படும் பிரதி ஆனது 90 நாட்களிற்கும் வேலைசெய்யும். ஒரு பயனரின் அங்கத்துவம் முடிவடைந்ததும் அதிகாரப்பூர்வமாக வைரஸ் மேம்படுத்தலகளை மேற்கொள்ளவியலாது எனினும் கணினியின் நாளைப் பின்போடுவதன் மூலம் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கிய மேம்படுத்தல்கள் ஊடாக மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம். எவ்வாறெனினும் அங்கத்துவம் முடிவடந்தாலும் நிரலில் உள்ள பிழைகளை சரிசெய்யும் பச்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதன் காப்பரேட் எடிசன் ஆனது வாங்கி வழங்கி (கிளையண்ட் - சேவர்) தத்துவத்தில் இயங்குகின்றது. இதில் எல்லாக் கணினிகளிலும் நிகழ்நிலை மேம்படுத்தல்கள் நிறுவப்பட்டிராதெனினும் அதனுடன் இணைக்கப்பட்ட வழங்கி (சேவர்) ஊடாக மேம்படுதிக் கொள்ளும். இவ்வாறான சேவர் மாத்திரமே சைமண்டெக்கின் இணையத்தளத்தூடாக மேம்படுத்தல்களை மேற்கொள்ளும். இதன் மூலமாக ஒரு வலையமைப்பில் நூற்றுக்கணக்கான கணினிகள் ஒரே மேம்படுத்தல்களை மேற்கொள்ளாமல் ஒரு மேம்படுத்தலை மேற்கொள்வதன் மூலம் இணைய இணைப்பை வினைத்திறனாகப் பயன்படுத்துவதோடு அந்த வழங்கியில் இருந்த ஒவ்வொரு கணினிக்கும் செல்லாமல் வரும் சிக்கல்களை கம்பியூட்டர் மனேஜ்மண்ட் கன்சோல் ஊடாகச் செய்யவியலும்.

போட்டி

நோர்ட்டன் ஆண்டிவைரஸ் கணினி வைரஸ்களை மாத்திரம் அன்றி கெட்டமென்பொருட்கல்ளான , ஒற்றுமென்பொருள் (ஸ்பைவேர்) மற்றும் விளம்பரமென்பொருள் (அட்வேர்) போன்றவற்றையும் நீக்கப் பாடுபடுகின்றது. இது இலவச மென்பொருட்களான ஒற்றுமென்பொருட்களைத் தானியங்கி முறையில் தேடி அழிக்கும் எனப் பொருள்படும் ஸ்பைபாட் சேச் ஆண்ட் டிஸ்றோய் போன்ற மென்பொருட்களுடன் போட்டியிடுகின்றது.

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.