கிளாம்வின்

கிளாம்வின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கான ஓர் இலவச திறந்த நச்சுநிரல் மென்பொருளாகும். இது காம் ஆண்டிவைரஸிற்கு வரைகலை இடைமுகத்தை வழங்குகின்றது.

கிளாம்வின்

கிளாம்வின் 0.95.1 விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் காட்சி
உருவாக்குனர் அல்ச் (alch)
பிந்தைய பதிப்பு 0.96 [1] / ஏப்ரல் 10 2010 (2010-04-10)
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வகை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
அனுமதி GPL
இணையத்தளம் கிளாம்வின்

கிளாம்வின் இலவச ஆண்டிவைரஸ் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம்.

கிளாம்வின் இன் வசதிகள்

  • ஸ்கான் பண்ணுவதை ஒழுங்கமைக்கும் வசதி
  • தானகவே வைரஸ் தகவற் தளத்தை மேம்படுத்தும் வசதி
  • தனித்தியங்கும் வைரஸ் ஸ்கானர்
  • விண்டோஸ் எக்ஸ்புளோளருடன் மெனியூவாச் சேர்தியங்கும்.
  • மைக்ரோசாப்ட் அவுட்லுக் உடன் சேர்ந்தியங்கும்.
  • இதன் செல்கிளாம்வின் (Portable ClamWin) USB Flash drive உடன் பயன்படுத்தலாம்.

நிகழ்நிலைப் பாதுகாப்பு

பொதுவான் நச்சுநிரல்கள் போன்றல்லாது வின்காமில் நிகழ்நிலையில் கோப்புக்களைப் பாதுகாக்கும் வசதியில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி ஏற்கனவே ஒரு நிகழ்நிலை நச்சுநிரற் தடுப்பி உள்ள கணினியில் கிளாம்வின் நச்சுநிரற் தடுப்பியை நிறுவிப் பாதுகாக்கவியலும். வின்பூச் என்கின்ற மென்பொருளூடாக இதனைச் செய்யலாமெனினும் வின்பூச் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 உடன் நீலத்திரையுடன் இறப்பை உண்டுபண்ணுவதுடன் இதன் விருத்தியும் கைவிடப்பட்டுவிட்டது.

வெளியிணைப்புக்கள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.