ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட்

ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் அமெரிக்கா ஆண் லைன் நிறுவனத்த்தின் முன்னணியுடன் உருவாக்கப்பட்ட இலவச நச்சுநிரலாகும். இதன் நச்சுநிரல்களைக் கண்டுபிடிக்கும் மென்பொருளானது காஸ்பேஸ்கி நிறுவனத்தால் காஸ்பேக்ஸி 6 ஆவது பதிப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதாகும். இது இப்போது அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதில்லை.

ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட்

இலவச ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் இன் திரைக் காட்சி
உருவாக்குனர் அமெரிக்கா ஆண்லைன் மற்றும் காஸ்பேக்ஸி
பிந்தைய பதிப்பு 6.0.2.621 / மே 30, 2006
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்,
வகை நச்சுநிரல்
அனுமதி இலவசம் key மின்னஞ்சலூடாக
இணையத்தளம் ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட்

வரலாறு

ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் நிகழ்நிலைப் பாதுகாப்பை வழங்குகின்றது. இந்த மென்பொருளுக்கான திறவுகோலை பதிவு செய்வதன் மூலம் இலவசமாக 1 வருடத்திற்குப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒரே திறவுகோலை ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளில் நிறுவக்கூடியதாக இருப்பினும் இது எத்தனை கணினிகளில் ஒரே திறவுகோலைப் பாவிக்கலாம் என்பதில் தெளிவான விளக்கம் இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட திறவுகோல் தேவையென்றால் மீண்டும் விண்ணபிக்கலாம். இதற்கு ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பாவிக்கலாம். ஒரே மின்னஞ்சல் முகவரியில் 10 வரையிலான திறவுகோல்களை எதுவித சிக்கலும் இன்றிப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் திறவுகோல் காஸ்பேக்ஸி ஆண்டிவைரஸ் மென்பொருளில் பாவிக்கவியலாது. ஆரம்பத்தில் இது காஸ்பேக்ஸி இணையத்தளமூடாகவே மேம்படுத்தல்களை மேற்கொண்டதெனினும் பின்னர் இதற்கு மேலதிகமாகப் பல தளங்களூடாக மேம்படுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது.

இயங்குதள் ஆதரவு

எல்லா நிறுவல்களிற்கும் ஆகக்குறைந்தது 50 மெகாபைட் இடவசதி வன்வட்டில் (ஹாட்டிஸ்க்) இல் இருத்தல் வேண்டும்.[1]

விண்டோஸ் இயங்குதளம் ஆகக் குறைந்த புரோசசர் நினைவகம் (மெமரி) மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளரின் குறைந்த பதிப்பு
வின்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு இண்டெல் பெண்டியம் 133 மெஹா ஹேட்ஸ் 32 மெகாபைட் ராம் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5
விண்டோஸ் மில்லேனியம் இண்டெல் பெண்டியம் 150 மெஹா ஹேட்ஸ் 32 மெகாபைட் ராம் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5
விண்டோஸ் எண்டி (சேவைப்பொதி 6) இண்டெல் பெண்டியம் 133 மெஹா ஹேட்ஸ் 32 மெகா பைட் ராம் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5
விண்டோஸ் 2000 புரொபெஷனல் (சேவைப்பொதி 3) இண்டெல் பெண்டியம் 133 மெஹா ஹேட்ஸ் 64 மெஹாபைட் ராம் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5
விண்டோஸ் எக்ஸ்பி (சேவைப்பொதி 1) இண்டெல் பெண்டியம் 300 மெஹா ஹேட்ஸ் 128 மெஹாபைட் ராம் இண்டநெட் எக்ஸ்புளோளர் 6
விண்டோஸ் விஸ்டா இண்டெல் பெண்டியம் 1 ஜிகா ஹேட்ஸ் 512 மெஹாபைட் ராம் இண்டெநெட் எக்ஸ்புளோளர் 7

எடுத்துக்காட்டாக இதை விண்டோஸ் XP இல் இதை நிறுவுவதற்கு ஆகக் குறைந்தது 128 மெகாபைட் நினைவகம் தேவைப்படும் (நினைவகம் வீடியோத் தேவைகளுக்காக பகிரப்பட்டிருந்தால் பகிரப்படாமல் இயங்குதளத்திற்கு இருக்கும் நினைவகமானது ஆகக்குறைந்தது 128 மெஹாபைட் நினைவகம் இருந்தல் வேண்டும்). விண்டோஸ் இயங்குதளங்கள் போன்றல்லாது அதற்குக் குறைவான நினைவகம் உள்ள கணினிகளில் நிறுவாது. இது விண்டோஸ் XP இன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளில் நிறுவலாம். இதன் 6.0.2.621 பதிப்பில் இருந்து விண்டோஸ் விஸ்டா இயங்குதளமும் ஆதரவளிக்கப்படுகின்றது.

உசாத்துணைகள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.