தோவாப்

தோவாப் (Doab) (உருது: دوآب, இந்தி: दोआब,[1] பாரசீக மொழிச் சொல்லான தோ+ஆப்=தோவாப் என்பதற்கு இரண்டு ஆறுகள் எனப் பொருள்படும். [2] [3]இரண்டு ஆறுகளுக்கிடையே உள்ள விளைநிலப் பரப்பை குறிப்பதற்கு பாரசீக மொழியில் தோவாப் என்பர்.

தோவாப்
دوآب / दोआब
இயற்கைப் பிரதேசம்
கீழ் பாரி தோஆப் பகுதியின் நீர்வரத்து கால்வாய், பஞ்சாப், தோஆப், இந்தியா
நாடுஇந்தியா
பாகிஸ்தான்

இந்தியாவின் தோஆப் நிலப்பகுதியானது, கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்கும். [1] தோவாப் நிலப்பரப்பின் மத்தில் வண்டல் மண் அதிகமாக காணப்படும் எனவே இது நல்ல விளைநிலங்களாக கருதப்படுகின்றது. தோவாப் பகுதிகளில் கோதுமை மற்றும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.

வேத, புராண, இதிகாச மற்றும் வரலாற்றுக் காலத்தில் தோவாப் பகுதிகள் சிறப்புடன் விளங்கியது.

பண்டைய குரு நாடு கங்கை ஆறு மற்று யமுனை ஆறுகளுக்கிடையே அமைந்த தோவாப் பிரதேசத்தில் இருந்தது.

இந்திய விடுதலைக்கு முன் வரை தோவாப் என்ற விளைநிலப் பரப்பின் பெயர் பயன்பாட்டில் இருந்தது.


In any doab, khadar land (green) lies next to a river, while bangar land (olive) has greater elevation and lies further from the river

உத்தரப் பிரதேச தோவாப்கள்

பிரித்தானியாவின் ஆட்சிக் காலத்தில் தோஆப் பகுதி மேல் தோஆப் (மீரட்), நடு தோஆப் (ஆக்ரா), கீழ் தோவாப் (பிரயாகை எனப் பிரிக்கப்பட்டிருந்தது.

கங்கை யமுனை தோவாப்

கங்கை யமுனை தோவாப் உத்திர பிரதேசத்தின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும். இதன் பரப்பளவு கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட அறுபதாயிரத்து ஐந்நூறு சதுரகிலோ மீட்டர் ஆகும். தோவாப் எண்ணூறு கிகோ மீட்டர் நீளமும், நூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இது வடக்கே இமய மலைத்தொடரையும் தெற்கே தக்காண பீடபூமியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இமய மலைத்தொடரில் இருந்து தெற்கு நோக்கி வழிந்து வரும் ஆறுகளின் மணல் தேங்கியதால் உருவான நிலப்பரப்பு ஆகும். கங்கை யமுனை தோவாப் வளமான நிலப்பரப்பு ஆகும். இங்கு கரும்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. தேக்கு மரங்களால் ஆன காடுகள் இந்நிலப்பரப்பினில் காணப்படுகின்றன. கங்கை யமுனை தோவாப் இந்தியாவில் மக்கள் தொகையும் வளமும் செறிந்த ஒரு நிலப்பகுதியாகும்.[4]

பஞ்சாப் தோவாப்கள்

பஞ்சாப் மாநிலம் மாஜ்ஹா, மால்வா, தோவாப் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்.[5] பெரும்பாலும் தோவாப் எனும் சொல் இந்தியாவில் உள்ள பஞ்சாபின் பிஸ்த்து தோவாப் அல்லது ஜலந்தர் தோவாபையே குறிக்கும். சட்லட்ஜ், பிஸ்து நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே பஞ்சாபின் தோவாப் ஆகும். பழங்காலத்தில் ஆறுகளை கடப்பது கடினமான காரியமாக இருந்ததால் அவை தனித்தனி பகுதிகளாக பிரிந்தன. ஒவ்வொரு பகுதியையும் வெவ்வேறு மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். இங்கு வாழும் மக்களும் புவி அமைப்பின் காரணமாக குறைந்த அளவே வாழ்ந்துள்ளனர். இதனால் இம்மூன்று பகுதி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவையும் மாறுபட்டுள்ளன. தோவாபில் வாழும் மக்கள் தோவாபியர்கள் என்று அழைக்கப்படுவர். தோவாபில் பேசப்படும் மொழி தோவாபி என அழைக்கப்படுகிறது. இது பஞ்சாபியின் சற்றே மாறுபட்ட வடிவம் ஆகும். பட்டியல் சாதியினர் தோவாபில் முப்பத்தியைந்து சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். பஞ்சாபிலுள்ள தோவாப்களை பஞ்சாபின் என்.ஆர்.ஐ ஹப் என்றும் அழைக்கப்படுகிறது. தோவாபியர்கள் பெரும்பாலும் பொருள் ஈட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகிவிட்டமையால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.[6]

1947-இல் பஞ்சாப் தோவாப் பகுதிகள்

பஞ்சாப் தோவாபில் உள்ள மாவட்டங்கள்

சிந்து சாகர் தோவாப்

சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பை சிந்து சாகர் தோவாப் என்பர். பஞ்சாப் தோவாப் பகுதியில் மேற்கு ஓரமாக அமைந்தது இந்த சிந்து சாகர் தோவாப் ஆகும். சிந்து சாகர் தோவாப் தற்போதய பாகிஸ்தானில் அமைந்துள்ளது.[7] பண்டைய இந்தியாவின் தோவாப்களில் பழையது சிந்து சாகர் தோவாப் ஆகும். இது மிகவும் வறன்ட நிலப்பகுதி ஆகும். பெரும்பாலும் பாலை நிலமே சிந்து சாகர் தோவாபில் அமைந்துள்ளது. இதனால் இது விளைச்சல் இல்லாத தோவாப் பகுதியாக கருதப்படுகின்றது. இசுலமாபாத், ராவல்பிண்டி ஆகியன சிந்து சாகர் தோவாபில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.

சஜ் தோவாப்

ஜீலம் ஆறு மற்றும் செனாப் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்புகளை சஜ் தோவாப் அல்லது ஜெக் தோவாப் பகுதி என்பர்.

ரெச்னா தோவாப்

ரெச்னா தோவாப் பகுதி செனாப் ஆறு மற்றும் இராவி ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது. ரெச்னா எனும் பெயர் பேரரசர் அக்பர் சூட்டியதாகும். இரு ஆறுகளின் தொடக்கத்தை இணைத்து இப்பெயரை அவர் சூட்டியுள்ளார். ரெச்னாவி இப்பகுதியில் பேசப்படும் மொழியாகும். இது பஞ்சாபியின் சற்றே மாறுபட்ட வடிவம் ஆகும். இந்நிலப்பரப்பு தற்போதய பாகிஸ்தானில் உள்ளது.

பாரி தோவாப்

பாரி தோவாப் எனப்படும் மஜ்ஜா தோவாப் பகுதி பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பாகும்.

பிஸ்த்து தோவாப்

பிஸ்த்து தோவாப் அல்லது ஜலந்தர் தோவாப் பகுதி, சத்லஜ் ஆறு மற்றும் பியாஸ் ஆறுகளுக்கிடையே இந்தியாவின் பஞ்சாபில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.