யூத தொழுகைக் கூடம்

தொழுகைக் கூடம் (Synagogue; எபிரேயம்: בית כנסת) என்பது யூதர்கள் அல்லது சமாரியர்கள் இறைவேண்டல் புரியும் இடத்தைக்குறிக்கும். இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய (House of Assembly or Prayer Hall) பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிக்கலாம்.

யூத தொழுகைக் கூடம், சிலோவாக்கியா

யூத மதத்தில் 10 யூதர்கள் (மின்யான் [Minyan]) ஒன்று கூடும் அல்லது வழிபடும் இடங்களை தொழுகைக் கூடம் என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. யூதர்களின் பல்வேறு இனங்களில் வழிபாட்டுத் தலங்களை பல் வேறு சொற்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் யூதர்கள் எத்தீஸ் மொழியில் ஷுல் (shul, செப வீடு) எனவும், ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய யூதர்கள் இஸ்நோகா (esnoga) என்றும் பாரசீகம் மற்றும் கரெய்ட் யூதர்கள் அரமேய மொழி தழுவிய கெனிசா என்ற சொல்லையும் தொழுகைக் கூடம் என்ற பொருளில் அழைத்து வந்தனர். அரபு மொழி யூதர்கள் நிஸ் (Knis) என்று அழைத்துவந்தனர். கிரேக்கச் சொல்லான சினகாக் (synagogue) ஆங்கிலத்திலும் (இடாய்ச்சு மொழி, பிரெஞ்சு மொழி ஆகியவற்றிலும்) அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது[1]

கடவுளிடம் இருந்து மோசே சினாய் மலையில் இருந்து பெறப்பட்டதாக விவிலியத்தில் குறிப்பிடப்படும் பத்துக் கட்டளைகளில் தொழுகைக் கூடம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

Further Readings

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.