தொடர்கதை
ஒரு நீண்ட கதை, சில அல்லது பல அத்தியாயங்களாக ஒரு பத்திரிகையில் அல்லது தொலைக்காட்சியில் தொடர்ந்து வெளிவந்தால் தொடர்கதை என்றழைக்கப்படும்.[1]
வகைகள்
- குடும்பக் கதைகள்
- வரலாற்றுக் கதைகள்
- அறிவியல் கதைகள்
- துப்பறியும் கதைகள்
- மர்மக் கதைகள்
- ஆன்மிகக் கதைகள்
- சிறுவர் கதைகள்
தன்மை
பெரும்பாலும் வாரப்பத்திரிகைகள் தொடர்கதையை வெளியிடுகின்றன. மிக அபூர்வமாக நாளிதழ்கள் தொடர்கதையை வெளியிடலாம். தினத்தந்தியில் வெளிவந்த கன்னித் தீவு எனும் சித்திரத் தொடர்கதை இதற்கு உதாரணமாகும்.
சிறப்பு
பிரபல எழுத்தாளர்கள் எழுதும் தொடர்கதைகள், கதை முடிந்து சில காலத்திற்குப் பிறகோ அல்லது பிற்காலத்திலோ புத்தகவடிவில் வெளியிடப்படலாம். பத்திரிகைகளில் வந்த சில தொடர்கதைகள், திரைப்படவடிவமும் பெற்றுள்ளன.
தமிழில்
கல்கியால் எழுதப்பட்ட தொடர்கதைகள், புத்தகவடிவம் பெற்றன.
சுஜாதாவால் எழுதப்பட்ட 'விக்ரம்' எனும் தொடர்கதை திரைப்படமாக தயாரித்து வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
- Law, Graham (2009). "Serials and the Nineteenth-Century Publishing Industry". in Brake, Laurel; Demoor, Marysa. Dictionary of Nineteenth-Century Journalism. London: Academia Press. பக். 567. http://books.google.com/books?id=qVrUTUelE6YC&pg=PA567.
இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.