தேவா (1995 திரைப்படம்)

தேவா (Deva)1995 ஆம் ஆண்டு விஜய், சுவாதி மற்றும் சிவகுமார் நடிப்பில், எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில், தேவாவின் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

தேவா
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி. விமல்
இசைதேவா
நடிப்புவிஜய்
சிவகுமார்
சுவாதி
மனோரமா
மன்சூர் அலி கான்
மணிவண்ணன்
வினு சக்ரவர்த்தி
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புகவுதம் ராஜு
கலையகம்பி. வி. கம்பைன்ஸ்
விநியோகம்பி. வி. கம்பைன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 1995 (1995-02-17)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

வெளியூரில் படித்துவிட்டு ஊர் திரும்பும் தேவா (விஜய்) பாரதி (சுவாதி)மீது காதல் கொள்கிறான். தேவாவின் தாய் ராசாத்தி (மனோரமா). தேவாவின் அண்ணன் ராஜதுரை ( மன்சூர் அலி கான்) தன் மோசமான நடவடிக்கைகளால் அனைவராலும் வெறுக்கப்படும் அந்த ஊரின் பணக்காரன். அவனுக்கு உறுதுணையாக இருப்பவன் மயில்சாமி (மணிவண்ணன்). ராஜதுரை செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்படும் ஊர் மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். சிலர் அவனுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பாரதியின் தந்தையும், ஊர்த்தலைவருமான காந்திதாசன் (சிவகுமார்) தலைமையில் அந்தப் போராட்டம் நடக்கிறது. தான் பாரதியைக் காதலிப்பதைக் காந்திதாசனிடம் கூறி சம்மதம் பெறுகிறான் தேவா. தேவாவின் தாய் அதற்குச் சம்மதித்தாலும் ராஜதுரை அந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். ராஜதுரையிடம் சண்டையிட்டு தேவா தன் தாயுடன் வீட்டைவிட்டு வெளியேறி போராட்டக்காரர்களுடன் இணைகிறான். அங்கு பாரதிக்கும் தேவாவுக்கும் திருமணம் நிச்சயமானாலும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்ற பிறகே தங்கள் திருமணம் நடக்கும் என்று உறுதியெடுத்துக் கொள்கிறான். அவர்களின் திருமணத்தைத் தடுக்க முயலும் ராஜதுரையின் முயற்சிகளை முறியடித்து தேவா அவனைக் கொல்ல முனைகையில் தேவாவைத் தடுக்கிறார் காந்திதாசன். ஆனாலும் ராஜதுரை மயில்சாமியால் கொல்லப்படுகிறான்.

நடிகர்கள்

படக்குழு

இசை

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வாலி, புலமைப்பித்தன் மற்றும் காளிதாசன்.

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் கால நீளம்
1 ஐயயோ அலமேலு வாலி விஜய் 4:47
2 சின்ன பையன் வாலி எஸ். என். சுரேந்தர், கே.எஸ் சித்ரா 4:42
3 இன்னொரு காந்தி புலமைப்பித்தன் மனோ, எஸ். என். சுரேந்தர் 4:17
4 கோத்தகிரி குப்பம்மா வாலி விஜய், சுவர்ணலதா, மனோரமா 5:02
5 ஒரு கடிதம் (ஆண் குரல் ) வாலி எஸ். பி. பாலசுப்ரமணியன், விஜய் 5:06
6 ஒரு கடிதம் (பெண் குரல்) வாலி கே. எஸ். சித்ரா 4:58
7 தேவா வர வாலி ஷோபா சந்திரசேகர், தேவா 2:13
8 மருமகனே காளிதாசன் தேவா, கிருஷ்ணராஜ் 4:49

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.