தூது (பாட்டியல்)

அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. பல தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. இவ்வாறு தூது அனுப்பும் உத்தி நற்றிணை போன்ற சங்கப் பாடல்களிலும், பின்னர் வந்த இலக்கியங்களிலும் கூடக் காணப்பட்டவைதான் எனினும், தூது அனுப்பும் செயலையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை தூது இலக்கியங்களே. இது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். தூதுச் சிற்றிலக்கியம் கலிவெண்பாவினாலே பாடப்படுகின்றன.[1]

இவ்வாறு தூது அனுப்புதல் என்பது நடைமுறையின் பாற்பட்டது அல்ல. சொல்ல விரும்பும் ஒரு விடயத்தைக் கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன.

தூது விடப்படுபவை

  • உயர்திணை: தோழி, விறலி
  • அஃறிணை: அன்னம், மயில், கிளி, வண்டு, பூ, மான், நெல்
  • மற்றவை: முகில்(மேகம்), தென்றல், பணம், தமிழ், நெஞ்சம்

தூது இலக்கியங்கள்

புத்தகத்தின் பெயர் இயற்றியவர் பெயர் உரையாசிரியரும் ஆண்டும் பதிப்பாசிரியரும் பதிப்பாண்டும்
அழகர் கிள்ளைவிடுதூதுபலபட்டடைச் சொக்கநாதர்??
கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டுவிடு தூதுகச்சியப்ப முனிவர்??
காக்கை விடு தூதுக. வெள்ளை வாரணனார்??
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூதுந. மு. வேங்கடசாமி நாட்டார்??
கூளப்பநாயக்கன் விறலிவிடு தூதுசுப்பிரதீபக் கவிராயர்கண்ணதாசன்
சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூதுதுறைமங்கலம் சிவப்பிரகாசர்??
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூதுமகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்??
சேதுபதி விறலிவிடு தூதுசரவணப் பெருமாள் கவிராயர்]]??
தமிழ்விடு தூது அல்லது மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூதுசங்கு புலவர் (1964)
புலவர் அ. மாணிக்கம் (மறுபதிப்பு 1999)
உ. வே. சாமிநாதையர்(1930)
திருத்தணிகை மயில்விடு தூதுமுத்துவேலுக் கவிராயர்??
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூதுகோவை கந்தசாமி முதலியார்??
துறைசை அம்பலவாண தேசிகர் பொன்விடு தூதுசுந்தரநாதர்??
நெல்விடுதூது???
பஞ்சவன்னத் தூதுஇணுவில் சின்னத்தம்பிப் புலவர்??
பத்மகிரிநாதர் தென்றல்விடு தூதுபலபட்டடைச் சொக்கநாதர்??
பழனி முருகன் புகையிலைவிடு தூதுசீனிச்சக்கரைபு புலவர்??
மதுரைச் சொக்கநாதர் பணவிடு தூதுஅருணாசலக் கவிராயர்??
மாரிவாயில் (1936)சோமசுந்தர பாரதியார்??
முகில்விடுதூது???
நெஞ்சு விடு தூதுஉமாபதி சிவாச்சாரியார்கி.பி. 1311-ம் ஆண்டு?

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 874

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.