துரைமுருகன்

துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தமிழக அரசியல்வாதியும் மற்றும் வழக்குரைஞரும் ஆவார். திமுக பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

துரைமுருகன்
தொகுதி காட்பாடி
சட்டமன்றப் பேரவை உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 1, 1938 (1938-07-01)
காங்குப்பம், காட்பாடி, வேலூர், தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வேலூர்
கல்வி இளங்கலைமானி சட்டம், முதுகலைமானி
சமயம் இந்து

துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.2016 ஆம் ஆண்டு மீண்டும் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்[1]

போட்டியிட்ட தேர்தல்கள் மற்றும் முடிவுகள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவியிதம் எதிர்த்து போட்டியிட்டவர் எதிர்த்து போட்டியிட்ட கட்சி எதிர்த்து போட்டியிட்டவரின்வாக்கு சதவியிதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971காட்பாடிதிமுகவெற்றி57.79தண்டாயுதபாணிநிறுவன காங்கிரசு32.25[2]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977ராணிப்பேட்டைதிமுகவெற்றி43.53வஹாப் கே.ஏ.சுயேச்சை22.68[3]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980ராணிப்பேட்டைதிமுகவெற்றி53.70ரேணு. என்அதிமுக44.91[4]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984காட்பாடிதிமுகதோல்வி39.62ஜி.ரகுபதிஅதிமுக57.08[5]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989காட்பாடிதிமுகவெற்றி43.41மார்கபந்து. ஆர்அதிமுக23.47[6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991காட்பாடிதிமுகதோல்வி33.02கலைசெல்விஅதிமுக56.43[7]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996காட்பாடிதிமுகவெற்றி61.20பாண்டுரங்கண்அதிமுக27.93[8]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001காட்பாடிதிமுகவெற்றி49.47நடராஜன்PMK43.30[9]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006காட்பாடிதிமுகவெற்றி49.55ப.நாராயணன்அதிமுக47.59[10]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011காட்பாடிதிமுகவெற்றி49.55அப்புஅதிமுக47.59[11]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016காட்பாடிதிமுகவெற்றி50.90அப்புஅதிமுக37.44[12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.