திருமதி பழனிச்சாமி

திருமதி பழனிச்சாமி, 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

திருமதி பழனிச்சாமி
இயக்கம்ஆர்.சுந்தர்ராஜன்
தயாரிப்புராமநாதன்
கதைஆர்.சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
சுகன்யா
டெல்லி கணேஷ்
நாசர்
கவுண்டமணி
பாலாம்பிகா
ரேகா
ஸ்ரீவித்யா
கிருபா சங்கர்
பாபு ஆண்டனி
ஆர்.சுந்தர்ராஜன்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி.மோகன்ராஜ்
வெளியீடுஅக்டோபர் 25, 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை

சமூகத் திரைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பழனிச்சாமி ஒரு ஆசிரியரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு படிக்காத மனிதர்; அம்சவேணி ஒரு ஆசிரியர் தான். அம்சவேணி பழனிச்சாமியைத் திருமணம் செய்து கொள்ள ஒரு நிபந்தனையுடன் ஒப்புகொள்கிறார். திருமணத்திற்குப் பின் தனது வீட்டில் வாழ பழனிச்சாமி சம்மதித்தால் மட்டுமே திருமணம் என்பதே அது.அந்த நிபந்தனையைப் பழனிச்சாமி ஒப்புக்கொண்டால், அதனால் அவள் வயதான தந்தையைக் கவனித்து கொள்ளலாம். நல்ல பொருத்தம் என ஊர் மெச்ச மணம் புரியும் அவர்களின் ஜோடி, திருமண இரவு வரை மட்டுமே அவ்வாறு எனத் தெரிகிறது. பழனிச்சாமி தங்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்றும் போது, அம்சவேணிக்குக் கோபம் ஏற்படுகிறது. அவர், அம்சவேணியின் தந்தை இல்லாமல், தனது சொந்த ஊரான கிராமத்திற்கு அம்சவேணியை அழைத்துச் செல்கிறார். அவரது மர்மமான நடவடிக்கைகளை என்னவென்று கண்டறியும் வரை கோபப்படும் அம்சவேணி, பின்னால் பழனிச்சாமியின் கோரிக்கைகளை உணர்ந்து அவரது இலட்சியத்தை நிறைவேற்றத் துணை புரிவதாகக் கதை நகர்கிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.